இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) வீனஸ் ஆர்பிட்டர் மிஷனுடன் (VOM) வீனஸ் பயணத்திற்கு தயாராகி வருகிறது. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் பூமியின் இரட்டையர் என்று கூறப்படும் வீனஸ் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யப்பட உள்ளது.
சுக்ராயன்-1 விண்கலம் மார்ச் 29, 2028 அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. உள் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் சுக்ராயன்-1 இந்தியாவின் முதல் பயணமாக இருக்கும். விண்கலம் 112 நாட்கள் பயணம் செய்து வீனஸை அடையும் என்று இந்திய விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்கலத்தை வீனஸுக்கு 112 நாள் பயணத்தில் செலுத்த இஸ்ரோவின் சக்திவாய்ந்த எல்.வி.எம்-3 (லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் 3) ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. கோள்களுக்கு இடையேயான ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், ஆர்பிட்டர் ஜூலை 19, 2028 அன்று அதன் இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், அதிநவீன அறிவியல் கருவிகளின் தொகுப்பைப் பயன்படுத்தி வீனஸின் வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் புவியியல் அம்சங்களைப் ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“