Advertisment

15ம் தேதிக்காக காத்திருக்கும் சந்திரயான் 2... புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

இந்த 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சந்திராயன் 2 ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்று மூன்று பாகங்களை கொண்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ISRO Chandrayaan-2 Launch, Rover of Chandrayan 2, ISRO chandrayan-2 Launch, Orbiter of Chandrayan 2,

ISRO Chandrayaan-2 Launch : சந்திரயான் 2 வருகின்ற ஜூலை 15ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் இந்த வானியல் தொடர்பான செயல்பாட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரோ, இந்த சந்திராயன் 2 செயற்கை கோள்கள் தொடர்பாக இரண்டு புதிய படங்களை வெளியிட்டுள்ளது.

Advertisment

Rover of Chandrayan 2, ISRO chandrayan-2 Launch

இதன் லேண்டர் விக்ரம் என்றும் ரோவர் ப்ரக்யான் என்றும் அளிக்கப்படுகிறது. விண்ணில் ஏவப்படும் இந்த செயற்கைகோள்கள் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவில் தரையிறங்கும்.

சந்திரயான் 1-ஐத் தொடர்ந்து விரைவாகவே அடுத்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட வேண்டும் என்று திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ரஷ்யா தன்னுடைய உதவியை இந்தியாவிற்கு வழங்க மறுத்துவிட்டதால் முழுக்க முழுக்க இந்த செயற்கை கோளின் லேண்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Chandrayaan 2 launch date and time : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங்கில் எப்படி பார்ப்பது?

இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள்

Rover of Chandrayan 2, ISRO chandrayan-2 Launch, Orbiter of Chandrayan 2,

இதன் மூலம் நிலவில் ஸ்பேஸ்கிராஃப்டை தரையிறக்கம் செய்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை அடைய போகிறது. இந்த 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சந்திராயன் 2 ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்று மூன்று பாகங்களை கொண்டுள்ளது. இவை மூன்றும் நிலவினை பற்றிய முழுமையான ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க : விண்ணில் இந்தியாவுக்கென ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் – இஸ்ரோ தலைவர்

லேண்டரும் ரோவரும் சந்திரனின் ஈர்ப்பு விசைக்குள் சென்றுவிட்டால், அதற்கடுத்து பிரச்சனை ஏதும் இல்லாமல் அவை நிலவில் தரையிறங்கிவிடும். பாராச்சூட் போன்ற வசதிகளுடன் இது தரையிறங்காது என்பதால் இந்த கருவிகள் விபத்தில் சிக்கவும் சரிசமமான வாய்ப்புகள் உள்ளன என்றும் இஸ்ரோ தரப்பு அறிவித்துள்ளது.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment