Amitabh Sinha
ISRO’s Chandrayaan-2 Launch : ISRO’s Chandrayaan-2 launch Scheduled at 2.43 pm today : இஸ்ரோ கடந்த 15ஆம் தேதி நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-2 செயற்கைக்கோளை ஏவ முயற்சிகள் செய்தது. ஆனால் விண்ணில் ஏற்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ராக்கெட்டில் பிரச்சனை இருப்பது கண்டறிந்து தற்காலிகமாக அந்த திட்டத்தை கைவிட்டது.
ISRO’s Chandrayaan-2 launch Scheduled at 2.43 pm today
இன்று மீண்டும் சந்திராயன்-2 விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது இஸ்ரோ. சந்திரயான் 2க்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மாலை 6:43 மணிக்கு துவங்கியது. நிலவில் தரை இறங்கும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் இது என்பதால் விண்ணில் செலுத்துவதற்கான நாட்கள் மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்டன.
விண்ணில் செலுத்துவதற்கு ஏற்ற காலநிலை ஜூலை 9 முதல் 17-ம் தேதி வரை தான் இருந்தது. ஆனால் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், இருக்கும் மிகக் குறைந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சந்திரயான்-2வை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 2 விண்ணில் செலுத்த ஏற்ற காலநிலையானது இந்த மாதங்களில் மட்டுமே சில நாட்கள் வருகின்றன. இதை விட்டுவிட்டால் இனி செப்டம்பர் மாதம் தான் இது போன்ற ஒரு சூழ்நிலை வரும் என இஸ்ரோவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே சந்திரயான் 1 நிலவில் நீருக்கான மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது. தற்போது சந்திரயான்-2 வெற்றி பெற்றால் நிலவின் பல்வேறு ரகசியங்களை கண்டறிய முடியும். எனவேதான் சந்திரயான்-2விற்கு உலக அளவில் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
பதினைந்தாம் தேதி விண்ணில் செலுத்த இருக்கும்போது ஹீலியம் கேஸ் பொருத்தப்பட்ட சேம்பரில் அழுத்தம் குறைய துவங்கியது கண்டறியப்பட்டது. அதன் காரணமாக தற்காலிகமாக விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு பழுதுகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் விண்ணில் செலுத்துவதற்கு ஆயத்தமாகி வந்தது இஸ்ரோ.
மேலும் படிக்க : சந்திரயான் 2 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இதிலென்ன காலதாமதம் ஏற்பட்டாலும் செப்டம்பர் 6ஆம் தேதி நிலவில் சந்திரயான்-2வின் லேண்டர் மற்றும் ரோவர் தரையிறங்கும் என்பதை உறுதி செய்துள்ளது இஸ்ரோ. தற்போது எடுத்துக்கொண்டுள்ள புதிய பாதையில் 48 நாட்களில் நிலவை அடையும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 54 நாட்களில் நிலவில் சந்திரயான் 2 தரை இறங்கும் படி வடிவமைக்கப்பட்டது. ஒரு நாள் முன்னபின்னதாக அமைந்து செப்டம்பர் 7ம் தேதி கூட நிலவில் சந்திராயன் இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
முதலில் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் படி 17 நாட்கள் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் செல்ல வேண்டும் ஆனால் தற்போது மாற்றம் வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி 23 நாட்கள் புவி சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-2 இயங்கும். அதற்கு அடுத்த 13 நாட்களில் சந்திரயான் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இயங்கும். இதற்கு முந்தைய திட்டத்தின்படி 28 நாட்கள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டது. ஆர்பிட்டர் 100 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் நிலவில் இயங்கி வரும்.
திட்டத்தின் 43வது நாளில் (செப்டம்பர் 2 அல்லது 3 தேதிகளில்) லேண்டர், ஆர்பிட்டரில் இருந்து தனியே பிரிந்துவிடும். செப்டம்பர் 6 அல்லது 7 தேதிகளில் நிலவில் லேண்டர் தரையிறங்கும்.
சந்திரயான் 2, சந்திரயான் 1ன் வெற்றியை தொடர்ந்து (2008) விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் ரஷ்யா தன்னுடைய ஒத்துழைப்பை பின்வாங்கிக் கொண்டதால் இத்தனை ஆண்டுகள் கால தாமதம் ஆகியுள்ளது. சந்திரயான் 1 சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் மட்டுமே பயணிக்க உருவாக்கப்பட்டது. சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால் நிலவில் செயற்கை கோள்களை தரையிறக்கிய 4வது நாடு இந்தியா என்ற பெருமையை பெறும்.
இந்த செய்தியை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 2. இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் மிக முக்கியமான வரலாற்று தருணத்தை நம் அனைவருக்கும் உருவாக்கித் தந்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.