அமிதாப் சின்ஹா
India Moon Mission Delay: இஸ்ரோவின் சந்திராயன் 2 நிலவு திட்டம்: குறிப்பிட்ட அந்த நாளில் ஏவப்பட்டிருந்தால், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 17 நாட்களும் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் 28 நாட்களும் சுற்றிவந்திருக்கும். முன்னதாக வின்கலத்தின் தரையிறங்கி மற்றும் ஊர்ந்து செல்லும் பகுதி பிரதான வின்கலத்திலிருந்து பிரிந்து செப்டம்பர் 6 ஆம் தேதி வின்கலம் நிலவில் தரையிறங்க தயாராக இருக்கும்.
ஆனால், கடந்த வாரம் ஜி.எஸ்.எல்.வி. எம்.கே 3 ராக்கெட்டில் ஹீலியம் வாயு கொள்கலன்களில் ஒன்றில் திடீரென அழுத்தம் குறைந்ததால் இஸ்ரோ சந்திராயன் 2 நிலவு திட்டத்தை கைவிட்டது என்பதை ‘தி சண்டே எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது.
ஜூலை 15 ஆம் தேதி வின்கலம் ஏவப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர், நிலவில் தரையிறங்கும் இந்தியாவின் முதல் திட்டத்தை தொழில் நுட்பகோளாறு என்று கூறி கைவிட்டது. இதையடுத்து, இந்த திட்டத்தின் நிபுணர் குழு சிக்கலை அடையாளம் கண்டு சரியான நவடிக்கையை எடுத்துள்ளதாகவும், அந்த அமைப்பு தற்போது இயல்பாக இயங்குவதாகவும் சந்திராயன் 2 சரியாக திங்கள் கிழமை ஏவப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
ஆனால், கடந்த வாரம், திடீரென அழுத்தம் குறைந்ததற்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகள் யாரும் அறிய இயலவில்லை. அதனுடைய ஹீலீயம் வாயு கொள்கலன்களில் ஒன்றில் அழுத்தம் வீழ்ச்சி அடைந்தது கவனிக்கப்பட்டது. -100 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலைக்கு சூப்பர் கூல் செய்யப்படும் கிரையோஜெனிக் எரிபொருள் நிரப்பப்படும்போது இது நடந்துள்ளது. இதற்கு காரணம் எரிபொருளின் மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக எரிபொருள் கொள்கலனைச் சுற்றியுள்ள சூழலும் குளிர்ச்சி அடைகிறது.” என்று இந்த திட்டத்தின் இஸ்ரோ இணை விஞ்ஞானி கூறியுள்ளார்.
இந்த ஹீலியம் கொள்கலன் எரிபொருள் கலனுக்கு அருகிலேயே இருந்தது. அதனால், எரிபொருள் நிரப்புவதால் அழுத்தம் வீழ்ச்சி அடையக்கூடும். நிரப்பப்பட்ட பலூன் ஒன்று பனி மீது போட்டால் அதிலிருந்து காற்று வெளியாகும்., அது போல, ஒன்று இங்கேயேயும் நடந்திருக்கக்கூடும். ஆனால், அந்த நேரத்தில், விஞ்ஞானிகள் எரிபொருள் நிரப்புவதால் அழுத்தம் குறைந்ததா அல்லது ஹீலியம் கலனில் கசிவு ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.”
அந்த விஞ்ஞானி கூறுகையில் அது ஹீலியம் கசிவாக இல்லாதிருந்தால் அது ஒன்றும் கவலைபடக் கூடிய பிரச்னை இல்லை. மேலும், “முடிவில் அழுத்தம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. மற்ற திட்டத்தில் இது நடந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த நேரத்தில் திட்டத்தின் பணியாளர்கள் மிகவும் உறுதியாக இல்லை. அதனால், ஏவுவதை ஒத்திவைத்து எச்சரிக்கையுடன் தவறாக வழிநடத்த முடிவு செய்யப்பட்டது.” என்று அந்த விஞ்ஞானி கூறினார்.
இந்த பிரச்னை அபாயகரமானதல்ல. இது ஏவப்படுவதைத் தடுக்கக்கூடிய ஒன்று அல்ல. மேலும், இந்த திட்டம் வெற்றிகரமானதாக இருக்கிறது. ஆனால், இது ஒரு ஆபத்தை ஏற்ககூடியதுதான். எனவே, திட்டத்தின் கட்டுப்பாட்டு முடிவில் இதனை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத ஆபத்து என்று ஒருவர் முடிவெடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
அந்த விஞ்ஞானி மேலும் கூறுகையில், முந்தைய பறக்கும் இயந்திரங்களிலிருந்து சிறிய தகவல்கள் இல்லாததால் சந்தேகங்கள் எழுந்தன என்று கூறுகிறார். “இது ஜி.எஸ்.எல்.வி.எம்.கே. – 3 (இந்தியாவின் மிக முன்னேறிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்) முதல் செயல்பாட்டு செயற்கைக்கோளாக இருந்தது. இதற்கு முன்பு இது ஒரு சோதனை பறக்கும் இயந்திரமாக இருந்தது. மேலும், 2 பறக்கும் இயந்திரங்களை மேம்படுத்துவதற்கானதாக இருந்தது. செயல்பாட்டு பறக்கும் இயந்திரங்களின் தகல்களை நம்ப முடியாது. எனவே விஞ்ஞானிகள் முதல் பறக்கும் இயந்திரத்தில் இது போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டனர்” என்று கூறினார்.
ராக்கெட்டில் உள்ள சிக்கலை மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் விஞ்ஞானிகள், ஹீலியம் வாயு அழுத்த வீழ்ச்சி, சூப்பர் கூல் கிரையோஜெனிக் எரிபொருள் காரணமாக இருந்ததா அல்லது ஹீலியம் வாயு கசிவு காரணமாக இருந்ததா என்ற இறுதி முடிவு என்ன என்பதை வெளியிடவில்லை.
இந்த பிரச்னை எரிபொருள் நிரப்பப்படும்போது மட்டுமே கவனிக்கப்பட்டது. அதற்கு முன்பே ஹீலியம் கொள்கலன்கள் நிரப்பப்பட்டன. அதனால், எரிபொருள் நிரப்பப்படும் நேரத்தில் மட்டுமே கசிவு ஏன் கண்டறியப்படுகிறது”என அந்த விஞ்ஞானி கேள்வி எழுப்பியுள்ளார்.
இருப்பினும், ஓய்வு பெற்ற மற்றொரு இஸ்ரோ விஞ்ஞானி, முந்தைய நிகழ்ச்சிகளை நினைவு கூறுகையில், இணைப்புகளில் சிறிய பிரச்சினைகள் காரணமாக கசிவு ஏற்படுவதை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது என்று கூறினார்.
"அது பறந்திருக்கக் கூடும் சந்தேகமில்லை. ஆனால், அதை ஒத்திவைத்து எல்லாவற்றையும் மீண்டும் சரிபார்த்தது என்பது ஒரு சிறந்த முடிவு என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் மதிப்புமிக்க பணி, அது சரியாக இருப்பது முற்றிலும் அவசியம். ஏவுவதை நிறுத்தியது புத்திசாலித்தனமான முடிவு என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
“ஏனென்றால், அது இறுதியில் ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். எஸ்.எல்.வி.யின் முதல் சோதனை பறக்கும் இயந்திரம் (இந்தியாவின் முதல் ஏவுகணை, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ஆகியவற்றின் முன்னோடி, 1979 ஆம் ஆண்டில் முதன்முறையாக சோதிக்கப்பட்டது) இதே போன்ற சிக்கல் காரணமாக தோல்வியடைந்தது. அந்த நேரத்தில் நாங்கள் நைட்ரஜனைப் பயன்படுத்தினோம். ஹீலியம் அல்ல, அப்போது நைட்ரஜன் அறையில் அழுத்தம் வீழ்ச்சி ஏற்பட்டது.”என்று அவர் கூறினார்.
வின்கலம் ஏவும் தேதி இப்போது 7 நாட்கள் தாமதமாகிவிட்டாலும், நிலவில் தரையிறங்கி மற்றும் ஊர்ந்து செல்லும் பயணத் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பிட்ட செப்டம்பர் 6 ஆம் தேதி நடக்கும். சந்திராயன் 2 சந்திரனை அடைய எடுத்துக்கொள்ளும் பாதை இந்த தாமதத்திற்கு ஏற்ப நெகிழ்வானதாக இருக்கும்” என்று இரண்டு விஞ்ஞானிகளும் கூறினார்.
இஸ்ரோவின் சந்திராயன் 2 நிலவு திட்டம்: குறிப்பிட்ட அந்த நாளில் ஏவப்பட்டிருந்தால், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 17 நாட்களும் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் 28 நாட்களும் சுற்றிவந்திருக்கும். முன்னதாக வின்கலத்தின் தரையிறங்கி மற்றும் ஊர்ந்து செல்லும் பகுதி பிரதான வின்கலத்திலிருந்து பிரிந்து செப்டம்பர் 6 ஆம் தேதி வின்கலம் நிலவில் தரையிறங்க தயாராக இருக்கும்.
“பயணத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை என்னால் சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஏழு நாட்களை உருவாக்குவது முற்றிலும் சாத்தியமாகும். ஏவும் பாதையில் சரிசெய்தல் செய்ய முடியும். இந்த பணியில் ஏராளமான இடங்கள் உள்ளன”என்று இஸ்ரோ விஞ்ஞானி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.