ISRO chandrayaan 2 soft moon landing : நிலவில் தரையிறங்க இருக்கும் 29வது செயற்கை கோள் சந்திரயான் 2 ஆகும். ஆனால் இதற்கு முன்பு எந்த விண்கலமும் செல்லாத இழக்கை நோக்கி பயணிக்க உள்ளது சந்திரயான் 2. சந்திரயான்-2ன் லேண்டர் விக்ரம், சந்திரனின் மத்திய ரேகையில் இருந்து 70 டிகிரி லேட்டிட்யூட்டில் தரையிறங்க உள்ளது சந்திரயான் 2.
இதற்கு முன்பு தரையிறங்கிய அனைத்து விண்கலங்களும் சந்திரனின் மத்திய ரேகைக்கு சற்று தொலைவிலேயே, வடக்கு புறத்தில் தரையிறங்கியுள்ளது. நாசாவின் சர்வேயர் 7 மட்டுமே சந்திரனின் மறுபுறம் தரையிறங்கியுள்ளது. ஜனவரி 10, 1968ம் ஆண்டு அந்த செயற்கைகோள் மத்திய ரேகையில் இருந்து 40 டிகிரி லேட்டிட்யூட் தென்புறத்தில் தரையிறங்கியது.
ISRO chandrayaan 2 soft moon landing
மத்திய ரேகையில் தரையிறங்கிய அனைத்து செயற்கை கோள்களும் ஸ்மூதாகவே லேண்ட் ஆகியுள்ளது. அதற்கு காரணங்களும் உண்டு.. ஏன் என்றால் அந்த பகுதியில் நிலம் சற்று சமதளமாக இருக்கும். அங்கு தரையிறங்கும் போது சேதாரங்களும் மிகக் குறைவு. மிகவும் பாதுகாப்புடன் தரையிறங்கும். அங்கு மலைச் சிரங்களும், நிலவுக் குழிகளும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சூரிய ஒளியும் மிகவும் சீராக கிடைப்பதால் தட்பவெட்ப மாறுதல்களும் இருப்பதில்லை.
ஆனால் சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. அங்கு மலைகள் அதிகம், நிலப்பரப்புகள் சற்று மோசமானதாகவே இருக்கும். நிலவுக் குழிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். வெப்பமோ மைனஸ் 230 டிகிரி வரை இருக்கக் கூடும்.
சூரிய வெளிச்சமே படாத பகுதியில் இந்த செயற்கை கோள் தரையிறங்க இருப்பதால் கருவிகள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கும். சில விண்கலங்கள் மட்டுமே அங்கு செல்ல முயற்சிகள் மேற்கொண்டது. இதுவரை நடத்தபட்ட ஆராய்ச்சியில் அப்பகுதியில் பனிச்சிகரங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த பகுதியில் சந்திரயான் 2 தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் நீர் இருக்கிறதா என்பது குறித்த மிக முக்கியமான ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.