/indian-express-tamil/media/media_files/2xyn8YVcPNtYt9GD5Joe.jpg)
புதிதாக நிறுவப்பட்ட மையம் இஸ்ரோவின் வளர்ந்து வரும் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை கணிசமாக மேம்படுத்தும், குறிப்பாக லான்ச் வெஹிக்கிள் மார்க்-3 தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ். சோமநாத், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் (எச்.ஏ.எல்) ஏரோஸ்பேஸ் பிரிவில் அதிநவீன உந்து சக்தி டேங்க் உற்பத்தி மற்றும் CNC இயந்திர வசதிகளை திறந்து வைத்தார்.
புதிதாக நிறுவப்பட்ட மையம், குறிப்பாக இந்தியாவின் கனமான மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டான லாஞ்ச் வெஹிக்கிள் மார்க்-3 (LVM3) க்கு, அதன் வளர்ந்து வரும் உற்பத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இஸ்ரோவின் திறனை கணிசமாக மேம்படுத்தும்.
Mr. S. Somanath, Chairman, ISRO inaugurated state-of-the-art Propellant Tank Production and CNC Machining facilities at HAL’s Aerospace Division today. The newly established facilities will provide a major boost to ISRO’s ability to meet its growing production needs, pic.twitter.com/evhmaxW7HC
— HAL (@HALHQBLR) June 5, 2024
HAL-ன் முயற்சிகளைப் பாராட்டிய சோமநாத், இரு நிறுவனங்களின் பெரிய நலனுக்காக நிறுவனத்தின் பரந்த திறன்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "இஸ்ரோவின் எதிர்கால பணிகளில் எச்ஏஎல் பெரிய பங்கை வகிக்கும், எனவே வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும், சவால்களை வடிவமைத்தல் மற்றும் இஸ்ரோவுக்கு உள்ள அழுத்தத்தை குறைக்க ராக்கெட் பணிகளை மேற்கொள்ள முடியும்," என்று அவர் கூறினார்.
ஆண்டுக்கு இரண்டு எல்.வி.எம்3 ராக்கெட்ளை மட்டுமே அனுமதிக்கும் தற்போதைய திறனுடன், இந்த புதிய மையம் இஸ்ரோவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 6 எல்விஎம்3 ஏவுகணைகளை ஆதரிக்கும் முக்கியமான கூறுகளை உற்பத்தி செய்ய HAL ஐச் செயல்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.