இஸ்ரோ ஒரு முக்கிய சாதனையாக, சமீபத்தில் பி.எஸ்.எல்.வி-சி60 POEM-4 பயணத்தில் அனுப்பபட்ட தாவரங்கள் முளைக்க தொடங்கி உள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ரிசர்ச் மாட்யூலை (CROPS) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையானது, விண்வெளியில் தாவர வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் (VSSC) உருவாக்கப்பட்ட CROPS பேலோட், நுண் புவியீர்ப்பு விசையின் கீழ் தாவிர வளர்ப்பு மற்றும் தாவர வாழ்வாதாரத்தைப் படிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு தானியங்கு அமைப்பாகும்.
இந்த ஆய்வுக்காக 8 காராமணி விதைகள் அனுப்பபட்டுள்ளன. அது தற்போது முளைவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முளைவிட்ட காராமணியில் விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கிறோம். 7 நாள்களுக்குள் விதை முளைவிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 நாள்களில் முளைத்தன. வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.