இந்தியாவின் புவிசார் செயற்கைக் கோள், இன்சாட்-3டி.எஸ், அதன் முதல் தரவுத் தொகுப்பை பூமிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் ‘இன்சாட் - 3டி.எஸ்’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கியது.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக் கோளில் ஆராய்ச்சிகாக மேம்பட்ட இமேஜர் மற்றும் சவுண்டர் பேலோடுகள் அனுப்பபட்டன.
இந்நிலையில், செயற்கைக் கோள் அதன் பணியைத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ நேற்று அறிவித்தது. மேலும், 6-சேனல் இமேஜர் கருவி மூலம் பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலம் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ கூறியது. இந்த சேனல்கள் மூலம் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மேகங்கள், ஏரோசல்கள், நில மேற்பரப்பு வெப்பநிலை, தாவர ஆரோக்கியம் மற்றும் நீராவி விநியோகம் போன்ற பல்வேறு வளிமண்டல மற்றும் மேற்பரப்பு நிகழ்வுகள் சேகரிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ, கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக் கோளின் கருவி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அது செயற்கைக் கோளின் இமேஜர் பேலோட் 6 அலைநீளப் பட்டைகள் மூலம் பூமியின் high-resolution படத்தை எடுத்துள்ளது.
இந்தத் தரவுகள் இந்திய விஞ்ஞானிகளுக்கு மெரியலாஜிக்கல் ஆய்வுகள், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் வளிமண்டல இயக்கவியலைப் புரிந்துகொள் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“