புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்-8- ஐ (EOS-8) ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
EOS-8 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (SSLV)-D3 மூலம் ஏவப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EOS-08 பணியின் முதன்மை நோக்கங்களில் மைக்ரோசாட்லைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை அடங்கும் என்று இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எஸ்.ஓ.எஸ்-8 செயற்கைக் கோள் மூன்று பேலோடுகளைக் கொண்டு அனுப்பபட்டுள்ளது. எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் SiC UV டோசிமீட்டர் ஆகியவையாகும்.
EOIR பேலோட், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களைப் பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த பேலோடின் செயல்பாடாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“