இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அதன் விண்வெளிப் பொருள்கள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு (NETRA) கருவியைப் பயன்படுத்தி "கேயாஸ் கடவுள்" என்று செல்லப்பெயர் கொண்ட 99942 அபோபிஸ் (99942 Apophis) சிறுகோளைக் கண்காணிக்கும் உலகளாவிய முயற்சிகளில் இணைந்துள்ளது.
பூமிக்கு அருகாமையில் உள்ள இந்த சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் பூமியை மிகவும் நெருங்கி வருவதால் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அபோபிஸ் என்பது பண்டைகால எகிப்திய தெய்வத்தின் பெயராகும். இந்த சிறுகோள் 2004 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் ஆரம்பத்தில் அதன் சாத்தியமான தாக்க அபாயத்தின் காரணமாக கவலையை ஏற்படுத்தியது.
தோராயமாக 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள் பார்க்க வேர்க்கடலை வடிவில் இருக்கும். ஏப்ரல் 13, 2029 அன்று, Apophis பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 32,000 கிலோமீட்டர்களுக்குள் கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இது பல புவிசார் செயற்கைக் கோள்களை விட பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும்.
ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சிறுகோளை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த சிறுகோள் 2029 இல் பூமியில் தாக்கம் ஏற்படுவதற்கான சிறிய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் இதை தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
இருப்பினும் இந்த சிறுகோள் குறைந்த 100 ஆண்டுகளுக்கு எந்தவொரு மோதல் அபாயத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதியாக நிராகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“