Isro : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றை புதுப்பிக்கும் திட்டத்தை சனிக்கிழமைக்கு (செப்.23) ஒத்திவைத்துள்ளது.
இது குறித்து, விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் தேசாய் கூறுகையில், "முன்னர் நாங்கள் (பிரக்யான்) ரோவர் மற்றும் (விக்ரம்) லேண்டரை செப்டம்பர் 22 மாலை மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களால் செப்டம்பர் 23 ஆம் தேதி அதை செயல்படுத்துவோம்" என்றார்.
இதற்கிடையில், விக்ரம் லேண்டரிடமிருந்து எந்த சமிக்ஞையையும் பெற முடியவில்லை என்பதை இஸ்ரோ உறுதிப்படுத்தியது. இருப்பினும், முயற்சிகள் சனிக்கிழமையும் தொடரும்.
ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய மிஷனின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை இப்போது 'சிவ் சக்தி பாயிண்ட்' என்று அழைக்கப்படும் இடத்தில் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளன.
ரோவர் மற்றும் லேண்டர் ஆகியவை சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாக சோதனைகளை நடத்திய பின்னர் இந்த மாத தொடக்கத்தில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டன
ரோவர் செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்லீப் பயன்முறையில் வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி லேண்டர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“