இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று (ஜன.9) ஸ்பேடெக்ஸ் டாக்கிங் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில் அந்த பணியை 2-வது முறையாக ஒத்திவைத்து அறிவித்துள்ளது.
இஸ்ரோ அண்மையில் பி.எஸ்.எல்.வி. - சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி ஆகிய செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியது. தொடர்ந்து ஸ்பேடெக்ஸ் டாக்கிங் திட்டம் மூலம் இந்த 2 செயற்கைக் கோள்களை விண்வெளி இணைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த செயல்முறை ஜன.7-ம் தேதி திட்டமிட்டிருந்த நிலையில் அது பின்னர் ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
செயற்கைக் கோள்களுக்கு இடையே 225 மீ தூரத்தை எட்டுவதற்கான சூழற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தெளிவான பார்வை கிடைக்கவில்லை. அதனால் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. செயற்கைக்கோள்கள் பாதுகாப்பாக உள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.