ISRO releases first illuminated image of lunar surface captured by Chandrayaan-2 - சந்திரயான் -2 கைப்பற்றிய சந்திர மேற்பரப்பின் முதல் ஒளிரும் படம் - இஸ்ரோ வெளியீடு
அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோமீட்டர் (ஐ.ஐ.ஆர்.எஸ்) மூலம் சந்திர மேற்பரப்பில் சந்திரயான் 2 எடுத்த முதல் வெளிச்சப் பகுதியை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது.
Advertisment
இதுவரை ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப்பகுதிக்கு செல்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'இஸ்ரோ' செயல்படுத்தியது. கடந்த மாதம் 7ம் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் நாசாவும் தொடர்ந்து விக்ரம் லேண்டர் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.
Advertisment
Advertisements
இந்நிலையில், அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோமீட்டர் (ஐ.ஐ.ஆர்.எஸ்) மூலம் சந்திர மேற்பரப்பின் முதல் ஒளிரும் படத்தை சந்திரயான் 2 எடுத்த படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. Imaging Infrared Spectrometer (IIRS) payload இப்படத்தை எடுத்துள்ளது.
சந்திரயான் அனுப்பிய இந்த படம், நிலவின் மேல்பரப்பின் வடக்கு அரைக்கோளத்தில் சோமர்ஃபீல்ட், கிர்க்வுட் மற்றும் ஸ்டெபின்ஸ் உள்ளிட்ட பல பள்ளங்களைக் காட்டுகிறது.
See the first illuminated image of the lunar surface acquired by #Chandrayaan2’s IIRS payload. IIRS is designed to measure reflected sunlight from the lunar surface in narrow and contiguous spectral channels.
#ISRO See the first illuminated image of the lunar surface acquired by #Chandrayaan2’s IIRS payload. IIRS is designed to measure reflected sunlight from the lunar surface in narrow and contiguous spectral channels.
"சந்திரயான் 2 இன் IIRS பேலோட் எடுத்த சந்திர மேற்பரப்பின் முதல் ஒளிரும் படத்தைப் பாருங்கள். சந்திர மேற்பரப்பில் இருந்து பிரதிபலித்த சூரிய ஒளியை IIRS படம் எடுத்துள்ளது" என்று இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது.