Advertisment

இஸ்ரோ விஞ்ஞானி டூ ரூ 2 கோடி டாக்ஸி பிசினஸ்; குமரி தமிழரின் ஓர் அசாதாரண பயணம்

டீச் ஃபார் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி உதயக் குமாரின் இந்த உத்வேகம் அளிக்கும் பயணத்தை லிங்க்டின் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
cab udha

டீச் ஃபார் இந்தியா நிறுவனத்தின் அலுமினி இன்பேக்ட் இயக்குனர் ராமபத்ரன் சுந்தரத்தின் கார் பயணம் ஒரு ஆச்சரியம், உத்வேகத்தை உலகிற்கு வெளிபடுத்தி உள்ளது. சுந்தரத்தின் கார் ஓட்டுநராக வந்தவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானியாக ஆவார். இப்போது அவர் வெற்றிகரமாக ரூ 2 கோடி வருமானம் ஈட்டும்  டாக்ஸி பிசினஸ் நடத்தி வருகிறார். 

Advertisment

லிங்க்ட்இன் பதிவில் சுந்தரம் கூறுகையில், எனது ஓட்டுநர் உதய குமார் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அவர் மதிப்புமிக்க விண்வெளி நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு புள்ளியியல் துறையில் தனது எம்ஃபில் மற்றும் பிஎச்டி பட்டம் பெற்றவர் ஆவார். 

இஸ்ரோவில் குமார் பணிபுரிந்துள்ளார். இஸ்ரோவில் அவர்  திரவ எரிபொருளில் பப்பில் ஏற்படாமல் தடுத்து பாதுகாப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

குமார் இஸ்ரோவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார், அதன்பிறகு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

குமார், 2017 ஆம் ஆண்டில், ஒரு சில நண்பர்களின் நிதி உதவியுடன், S T Cabs என்ற பெயரில் தனது சொந்த டாக்ஸி பிசினஸை தொடங்கினார். இப்போது சுந்தரம் அவரது சகோதரருடன் சேர்ந்து, 37 கார்களை கொண்டு டாக்ஸி பிசினஸ் செய்து ஆண்டுக்கு 2 கோடி வரை வருவாய் ஈட்டி வருகிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment