ISRO sends Vyomamitra humanoid to space : 2021ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது. அதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்திய விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட விமானிகள் ரஷ்யாவுக்கு மேற்பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு சில ரோபோக்களை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் முடிவினை எடுத்தது இஸ்ரோ. இதற்காக ரோபாவை உருவாக்கியும் வந்தது. வ்யோமமித்ரா என்று அழைக்கப்படும் இந்த ரோபோ பெங்களூருவில் (23/01/2020) நேற்று நடைபெற்ற ஹூமன் ஸ்பேஸ்ஃப்ளைட் என்ற நிகழ்வில் இந்த ஹால்ஃப் ஹூயுமனாய்ட் (Half Humanoid) ரோபோவை அறிமுகம் செய்தது இஸ்ரோ.
இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ரோபா, செய்தியாளர்கள் சந்திப்பில் “ஹெலோ எவ்ரிவொன், நான் தான் வ்யோமமித்ரா, ஹால்ஃப் - ஹ்யுமனோய்ட், ககன்யான் மிஷனுக்காக நான் உருவாக்கப்பட்டுள்ளேன்” என்று அது கூறியது. மேலும், நான் விண்வெளியில் ப்ரீ-மோடுயூல் பாராமீட்டர்களை கண்காணிப்பேன், ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உங்களை அலர்ட் செய்வேன்” என்றும் கூறியது.
இஸ்ரோ சேர்மென் கே.சிவன் இது குறித்து கூறிய போது, மனிதர்கள் செய்யும் செயலை செய்வதற்காக இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்ப்பதோடு மனிதர்கள் செய்யும் பணியையும் விண்வெளியில் இந்த ரோபோக்கள் செய்யும் என்று கூறினார்.
ககன்யானை 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு இரண்டு முறை மனிதர்களற்ற, ரோபோக்கள் மட்டுமுள்ள இரண்டு ஸ்பேஸ் ஷட்டல்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும். முறையே டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021ல் அனுப்பப்பட உள்ளது. வ்யோமமித்ரா என்ற பெயர் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள் கொண்டு உருவாக்கப்பட்டது. வ்யோம என்றால் வானம் மித்ரா என்றால் நண்பன் என்று பொருள்.விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களின் உயிருக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் நிலை உருவானால் அவர்களை காப்பாற்றும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.