இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புஷ்பக், மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் (ஆர்.எல்.வி -Reusable Launch Vehicle (RLV)-ன் 3-வது தரையிறக்க சோதனையை மேற்கொள்ள தயாராகி வருகிறது.
புஷ்பக் மற்றும் சினூக் ஹெலிகாப்டர் உட்பட அனைத்தும் சோதனைக்கு தயாராக உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வரும் வாரத்தில் வானிலை நிலவரம் பொறுத்து சோதனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
RLV-LEX3 தரையிறக்க சோதனையானது, கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிக்கல் சோதனைத் தளத்தில் நடத்தப்படும் என்று மையம் கூறியுள்ளது. கடந்தாண்டு மார்ச் 22 அன்று RLV-LEX2 சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 'புஷ்பக்'-3 சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
RLV-LEX2 சோதனையை விட RLV-LEX3 மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. LEX2-ன் போது 150 மீட்டரில் இருந்து intentional cross-range error செய்யப்பட்டது, தற்போது இது 500 மீட்டர் செய்யப்பட உள்ளது.
ஓடுபாதை தளத்தில் இருந்து வேறு ஒரு இடத்தில் இருந்து ராக்கெட் மேல் இருந்து விடப்படும். கணினி தன்னைத்தானே சீரமைத்து பாதையை கண்டறிந்து சரியான இடத்தில் தரையிறங்குவதை நோக்கமாக கொள்ள வேண்டும்.
மென்மையான தரையிறக்கத்தை உறுதி செய்வதற்கும் டச் டவுன் சுமைகளைக் குறைப்பதற்கும், LEX2 இன் போது வினாடிக்கு 1.5 மீட்டர் என்ற வரம்புடன் ஒப்பிடும்போது, பிரதான தரையிறங்கும் கியரின் சிங்க் வீதம் வினாடிக்கு 1 மீட்டருக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு ஸ்மோக் மார்க்கர் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. பாதையைக் கண்டறிய அறிமுகப்படுத்தப்பட்டது, பகுப்பாய்வு மற்றும் எதிர்கால மேம்பாடுகளுக்கான காட்சித் தரவை வழங்க ஏதுவாக இது பொருத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இந்த முயற்சி என்ன?
ஆர்.எல்.வி என்பது மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் அல்லது ராக்கெட் ஆகும். RLV-LEX என்ற பெயரில் இஸ்ரோ இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் ராக்கெட்டை மாற்றுவது இந்த முயற்சியாகும். இதன் மூலம் செலவு குறையும் மற்றும் விண்வெளி கழிவுகளை குறைக்க முடியும் என்பதாகும்.
RLV-LEX3 மற்றும் IADT ஆகியவற்றின் வெற்றிகரமான நிறைவு முறையே இஸ்ரோவின் லட்சிய மறுபயன்பாட்டு ஏவுதளம் மற்றும் மனித விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க மைல்கற்களைக் குறிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“