/indian-express-tamil/media/media_files/2024/12/24/uZ5UXvPbxgJikquhsZVF.jpg)
இந்த ஆண்டைத் தொடங்கியதைப் போலவே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டின் இறுதியில் மற்றொரு விண்வெளி திட்டத்தை செயல்படுத்துகிறது. டிசம்பர் 30-ம் தேதி இஸ்ரோ முக்கியத்துவம் வாய்ந்த ஸ்பேடெக்ஸ் திட்டத்தை ஏவுகிறது. டிசம்பர் 30-ம் தேதி இரவு 9:58 மணிக்கு இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.
Docking செயல்முறை மூலம் செயற்கைக் கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது. அதாவது 2 செயற்கைக் கோள்களும் ஏவப்படும் விண்வெளியில் இணைக்கப்படும் ஒரு செயல்முறையாகும்.
இது சந்திரயான்-4 மற்றும் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் அமைப்பதற்கு முக்கிய பணியாகும். ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் SDX01 அல்லது Chaser மற்றும் SDX02 அல்லது Target ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளது.
அவை பிரிந்த பிறகு, இரண்டு செயற்கைக்கோள்களிலும் உள்ள பேலோடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படும்.
2 செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. 220 கிலோ எடையுள்ள இரண்டு செயற்கைக் கோள்களை 470 கி.மீ வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ஏவப்பட்ட ஒரு நாளுக்குள், இரண்டு செயற்கைக்கோள்களும் தங்களுக்கு இடையே சுமார் 10 முதல் 20 கிமீ தூரத்தை உருவாக்கும்.
பின்னர் இலக்கு செயற்கைக் கோளில் உள்ள உந்துவிசை அமைப்பு செயற்கைக்கோள்கள் மேலும் விலகிச் செல்வதைத் தடுக்கும். அதாவது இரண்டு செயற்கைக்கோள்களும் 20 கி.மீ இடைவெளியில் ஒரே வேகத்தில் தொடர்ந்து நகரும் - இந்த செயல்முறை 'ஃபார் ரெண்டெஸ்வஸ்' என்று அழைக்கப்படுகிறது.
சேசர் செயற்கைக்கோள் பின்னர் இலக்கு செயற்கைக்கோளை நெருங்கி, அவற்றுக்கிடையேயான தூரத்தை படிப்படியாக 5 கிமீ, 1.5 கிமீ, 500 மீ, 225 மீ, 15 மீ, 3 மீ என குறைத்து, பின்னர் ஒன்றாக இணைக்கும். அதன் பின்னர் விண்வெளியில் நிலை நிறுத்தப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: ISRO to launch its key Spadex mission on December 30
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.