வானிலை ஆய்வுகளை மேம்படுத்தவும், சிறந்த வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்கு உதவவும், இஸ்ரோ இன்சாட்-3டி.எஸ் என்ற வானிலை ஆய்வு செயற்கைக் கோளை ஏவ உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கூறுகையில், இன்சாட்-3டி.எஸ் செயற்கைக் கோள் ஜியோசின்க்ரோனஸ் சார்டிலைட் லாஞ் வெகிக்கள் F14 (GSLV F14) ராக்கெட் மூலம் பிப்ரவரி 17-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று கூறியது.
"ஜி.எஸ்.எல்.வி-எஃப்14/இன்சாட்-3டி.எஸ் பயணத்தின் ஏவுதல் பிப்ரவரி 17, சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC) SHAR இருந்து ஏவப்படும்" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி இன்சாட்-3டி.எஸ் வானிலை செயற்கைக்கோளை ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (ஜி.டி.ஓ) நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விண்வெளி நிறுவனம் கூறியது. அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் சூழ்ச்சிகள் செயற்கைக்கோள் புவி-நிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகள் மற்றும் நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“