ஆண்டு இறுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்பேடெக்ஸ் திட்டத்தை ஏவுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (டிச.30) இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி.60 ராக்கெட்டை ஏவுகிறது.
தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக் கோள்களை ராக்கெட் சுமந்து செல்கிறது. ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என அழைக்கப்படும் 2 சிறிய செயற்கைக் கோள்களை ராக்கெட் சுமந்து செல்கிறது.
இந்த திட்டம் எதிர்காலத்தில் நிலவு திட்டமான சந்திரயான்-4 மற்றும் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் அமைப்பதற்கு முக்கிய பணியாகும். தற்போது ஏவப்படும் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் செயற்கை கோள்கள் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது.
அதாவது, 2 செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டு விண்ணில் ஒன்றிணைக்கப்படுகின்றன. இது இஸ்ரோவின் எதிர்காலத் திட்டத்திற்கு முக்கியமானவை. தலா 220 கிலோ எடையுள்ள இரண்டு செயற்கைக் கோள்களும் 470 கி.மீ தூரத்தில் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.