நிலவில் ஒரு நாள் ஆகும் போது பூமியில் இருக்கும் நமக்கு 14 நாட்கள் ஆகியிருக்கும். இன்னும் சுருங்க சொன்னால், லேண்டர் விக்ரம் ஹர்ட் லேண்டிங் மூலம் நிலவில் இறங்கி இன்னும் ஒரு சூரிய பொழுது அங்கு மறையவில்லை. நிலவில் சூரியன் மறைய நமது பூமி கணக்கின் படி இன்னும் மூன்று நாட்களே உள்ளன. சூரியன் மறைந்தால் நிலவின் குளிர் மைனஸ் 100 டிகிரிக்கு மேல் செல்லும். அந்த குளிரைத் தாக்கு பிடிக்கும் அளவிற்கு லேண்டர் விக்ரம் வடிவமிக்கபடவில்லை. எனவே இன்னும் மூன்று நாட்களில் (நமது பூமி கணக்கின்) லேண்டர் விக்ரமைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் , பின் எப்போதும் அதை தொடர்பு கொள்ள முடியாது.
தனது ட்விட்டட் பக்கத்தில் இஸ்ரோ அவ்வப்போது பட்டும் படாமலும் சில ட்வீட்களையும் பதிவு செய்து வருகிறது.
உதாரணமாக, செப்டம்பர் 10-ல் இஸ்ரோ வெளியிட்ட ட்வீட்
சந்திரயான் 2 ஆர்பிட்டரால் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது. லேண்டர் விக்ரமுடன் தொடர்பு கொள்ளும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம் என்று தெரிவித்தது .
இந்நிலையில், செப்டம்பர் 17- ம் தேதி, இஸ்ரோவின் ட்வீட் சற்று வெளிப்படையாகவும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் இருந்தன.
அதாவது , இஸ்ரோ "எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி" தெரிவிக்கிறோம், இந்தியமக்களின் நம்பிக்கையிலும், கனவுகளிலும் நங்கள் உந்தப்படுகிறோம்" என்பது போல் இருந்தது .
இந்த ட்வீட்டில் விக்ரம் லேண்டரைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. "எந்தவொரு புதுத் தகவலும் அல்லது படமும் தெரியவந்தால் எங்கள் இணையதளத்தில் பகிரப்படும்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது .
இருந்தாலும், மென்மையான தரையிறங்குவதில் தோல்வியுற்றதற்கான காரணங்களை அறிய இஸ்ரோவிற்குள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஆய்வுகளை இன்னும் இரு சில நாட்களுக்குள் மிக விரைவில் சமர்ப்பிக்கக்கூடும் என்று ஒரு தரப்பும் கூறுகிறது
"சரியான முறையில் ஆய்வு செய்து சில நாட்களில் இந்த அறிக்கை பொது மக்களுக்காக வெளியடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 7 -ம் தேதி இறுதியாக விக்ரமுடன் தொடர்பு கொண்ட போது, அது மணிக்கு 180 கி.மீ (நொடிக்கு 50-60 மீட்டர்) என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. நொடிக்கு 5 மீட்டர் என்ற வேகத்தில் தரையிறங்கினால் அதனை தாங்கும் வகையில் ஷாக் அப்சார்ப்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் நிலவை நோக்கி அது தரையிறங்கிய வேகம் மிகவும் அதிகமானது. அதனால் விக்ரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் பாகங்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று சிவன் தெரிவித்திருந்தார் . அடுத்தடுத்த அறிக்கைகளில், இஸ்ரோ விக்ரமுடனான தொடர்பை இழந்துவிட்டதாக மட்டுமே கூறியது.
சில நாட்களுக்குப் பிறகு, சந்திரனைச் சுற்றி வரும் சந்திரயான் -2 ஆர்பிட்டர், லேண்டரைக் கண்டுபிடித்து அதன் “வெப்ப உருவத்தை” எடுத்ததாக கூறியது. ஆனால், இந்த வெப்பப் படங்களை(தெர்மல் இமேஜ்) இன்னும் வெளியிடவில்லை, மேலும், ஆப்டிகல் படங்களை எடுக்கக்கூடிய கேமராக்கள் ஆர்பிட்டரில் இருந்தும் ஏன் விக்ரம் லேண்டர் சாதாரண படங்கள் ஏன் எடுக்கப்படவில்லை என்ற கேள்விகளுக்கு இஸ்ரோ இன்னும் பதிலளிக்க வில்லை .
இந்நிலையில்,, நாசாவின் சந்திர மறுமலர்ச்சி ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ), 2009 முதல் சந்திரனைச் சுற்றி வருகிறது. இந்த எல்ஆர்ஓ கடந்த செவ்வாய்யன்று விக்ரம் இறங்கிய இடத்திற்கு மேலே வந்திருப்பதாகவும்,விக்ரமின் படங்களை எடுக்கும் என்றும் எதிர்பாக்கப் படுகிறது. ஆனால் இவை எப்போது வெளியிடப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை
எல்.ஆர்.ஓ படங்கள் மிக விரைவில் வெளியிடப்படும், நாசா கொள்கையின்படி, எல்.ஆர்.ஓ வின் அனைத்து டேட்டாக்களும் பொதுவான வைகளாக இருக்கும் என்று நாசா அதிகாரி அமெரிக்க ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.