ஆதித்யா எல்.1 விண்கலத்தில் உள்ள 2 கருவிகள் ரிமோட் சென்சிங் கருவிகள் கடந்த மே மாதம் நிகழ்ந்த சூரியப் புயலை புகைப்படம் எடுத்தன.
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1, செப்டம்பர் 2, 2023 அன்று ஏவப்பட்டது. ஏவப்பட் 127 நாட்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அதன் இலக்கான லக்ராஞ்சியன் புள்ளியை (எல்1) அடைந்தது. எல்1 புள்ளி பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் அங்கிருந்து விண்கலம் சூரியனைத் தொடர்ந்து பார்க்க உதவுகிறது.
சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) மற்றும் விஷன் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) ஆகியவை மே 2024 இல் சூரியனின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளைக் படம் பிடித்துள்ளன.
சூரியனில் ஏற்படும் காந்த விசை புயலுக்கு எக்ஸ் மற்றும் எம் வகை சூரிய கதிர்கள் தான் காரணம். சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்களுடன் எக்ஸ், எம் வகை சூரிய கதிர்களுக்கு தொடர்பு உள்ளது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
மே 8-15 வாரத்தில் சூரியனில் செயல்படும் பகுதி AR13664, பல எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்புகளை வெளியிட்டது, அவை மே 8 மற்றும் 9 இல் CME-களுடன் தொடர்புடையவை. இவை மே மாதம் ஒரு பெரிய புவி காந்த புயலை உருவாக்கியது. மே 17 அன்று SUIT பேலோட் எடுத்த சூரிய படங்களை இஸ்ரோ வெளியிட்டது, மேலும் VELC ஆல் ஆய்வு செய்யப்பட்ட விவரங்களையும் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“