Advertisment

இஸ்ரோவின் ஆதித்யா எல்1: சூரியனின் அதிக ஆற்றல் எக்ஸ்ரே கதிர்கள் முதல் படம்பிடிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் அமைப்பின் (இஸ்ரோ) ஆதித்யா எல்1 விண்கலம் சூரியன் ஆய்வுத் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை நிறைவு செய்துள்ளது

author-image
WebDesk
New Update
Solar 1

சூரியன் தீப்பிழம்பாக எரியும் இந்த விளக்கப் படம் ஆகஸ்ட் 5. 2023 அன்று நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகத்தால் பதிவு செய்யப்பட்ட இந்த படம் சூரியனைக் காட்டுகிறது. (NASA/SDO)

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் முதல் முறையாக அதிக ஆற்றல் கொண்ட சூரியனின் எக்ஸ்ரே கதிர்வீச்சைப் படம்பிடித்தது.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் அமைப்பின் (இஸ்ரோ) ஆதித்யா எல்1 விண்கலம் சூரியன் ஆய்வுத் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை நிறைவு செய்துள்ளது - அது அதன் முதல் அதிக ஆற்றல் கொண்ட சூரியனின் எக்ஸ்ரே கதிர்களைப் படம்பிடித்துள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்க: ISRO’s Aditya L1 mission captures its first high-energy solar flare

“அக்டோபர் 29, 2023 அன்று தோராயமாக 12:00 முதல் 22:00 UT வரையிலான அதன் முதல் கண்காணிப்பு காலத்தில், ஆதித்யா-L1 விண்கலம் உயர் ஆற்றல் L1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (HEL1OS) சூரியனின் தீப்பிழம்பு கட்டத்தைப் பதிவு செய்தது. பதிவுசெய்யப்பட்ட தரவு, அமெரிக்காவின் நோவா (NOAA) கோஸ் (GOES) செயற்கைக்கோள் அளித்த எக்ஸ்ரே ஒளி வளைவுகளுடன் ஒத்துப்போகிறது” என்று ISRO செவ்வாய்க்கிழமை சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ குறிப்பிடும் அமெரிக்காவின் கோஸ் (GOES) “ஜியோஸ்டேஷனரி செயல்பாட்டு சுற்றுச்சூழல் செயற்கைக்கோள்” ஆகும். இது அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (NOAA) இயக்கப்படுகிறது. இது வானிலை முன்னறிவிப்பு, கடுமையான புயல் கண்காணிப்பு மற்றும் வானிலை ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு உதவுகிறது.

இந்த படம் ஆதித்யா எல்1 விண்கலம் ஹெல்1ஓஎஸ் (HEL1OS)  கருவி மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் எல்1 விண்கலம் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் என்பது கடினமான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும். இது 10 முதல் 150 keV வரையிலான பரந்த எக்ஸ் ரே ஆற்றல் அலைவரிசையில் இயங்குகிறது. இது சூரியனில் சூரிய ஒளியின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.

சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் பிற விண்வெளி வானிலை நிகழ்வுகளை ஆய்வு செய்வது முக்கியம். ஏனெனில், அவை பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதிக்கலாம். அவை ஆற்றல் அமைப்புகள், செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள் மற்றும் வானொலி தகவல்தொடர்புகளை பாதிக்கலாம். மோசமான சூழ்நிலைகளின் போது, அவை மணிக்கணக்கில் பூமியின் பெரிய பகுதிகளை பாதிக்கும் இருட்டை ஏற்படுத்தும். சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் சூரிய செயல்பாடுகளைப் ஆய்வு செய்வது அத்தகைய அபாயங்களை எதிர்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் தயாராக உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment