இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3, ஜூலை மாதம் ஏவப்படுவதற்கு முன்னதாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரயான்-3 திட்டமானது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். சந்திரயான் -3 ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவரைக் கொண்டுள்ளது, மேலும் இது விண்வெளி ஏஜென்சியின் ஏவுகணை வாகன மார்க்-III (LVM3) அமைப்பால் ஏவப்படும்.
மேலும், உந்துவிசை தொகுதியானது SHAPE (ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹேபிடபிள் பிளானட் எர்த்) கருவியையும் கொண்டு செல்லும், இது சந்திர சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் போலரிமெட்ரிக் அளவீடுகளை ஆய்வு செய்யும்.
இது தொடர்பாக யூஆர் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் எம் சங்கரன் கூறுகையில், “சந்திராயன்-3 ஏவுகணை துறைமுகத்தை ஏற்கனவே அடைந்து விட்டது, ஸ்ரீஹரிகோட்டாவில் தயாராகி வருகிறது, ஜூலையில் ஏவுதல் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
சந்திரயான்-3 பணியின் முதன்மை நோக்கம் நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிப்பதாகும். இதுவரை, மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது.
அந்த நாடுகள் சோவியத் யூனியன் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகும்.
முன்னதாக, இஸ்ரோ சந்திரயான் -2 திட்டத்துடன் அத்தகைய மென்மையான தரையிறக்கத்தை முயற்சித்தது, விக்ரம் லேண்டர் மிஷன் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்த பிறகு தோல்வியில் முடிந்தது.
மிக சமீபத்தில், ஏப்ரல் 25, 2023 அன்று, ஜப்பானிய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஐஸ்பேஸால் கட்டப்பட்ட ஹகுடோ லேண்டரும் மென்மையான தரையிறக்கத்தை அடையத் தவறிவிட்டது.
விண்கலம் பூமியில் இருந்து நான்கு மாத கால பயணத்தை மேற்கொண்டது, இதன் போது அது 1.6 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்தது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“