ககன்யான் மட்டும் இஸ்ரோவின் திட்டமில்லை… பாராளுமன்றத்தில் பட்டியலிடப்பட்ட திட்டங்கள் ஒரு பார்வை!

. ஆஸ்ட்ரோசாட் டேட்டாவின் கீழ் 12 திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.

By: February 16, 2020, 4:42:35 PM

ISRO’s exciting new technologies and space programmes : ஸ்பேஸ் கிரேட் லித்தியம் ஐயன் பேட்டரிகள், மினி சின்த்தெடிக் ரேடர், ஆப்டிக்கல் இமேஜிங் சிஸ்டம், எம்.எம்.எஸ் டெர்மினல் போன்றவற்றை உருவாக்கி உள்ளது இஸ்ரோ. இந்த தகவல் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் இஸ்ரோ கடந்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கிய பல்வேறு டெக்னாலஜிகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவித்தார். அதில் தான் மேலே கூறிய ஆராய்ச்சிக் கருவிகள் இடம் பெற்றுள்ளது.

2025ம் ஆண்டுக்கான தொலை தூர திட்டங்களை கொண்டிருக்கும் இஸ்ரோ வருகின்ற காலங்களில் சந்திராயன் 3, எக்ஸ்ரே போலாரிமீட்டர் சேட்டிலைட், ஆதித்யா எல்1, ககன்யான், வீனஸ் ஆர்பிட்டர், டிஷா ஏரோனாமி மிஷன்ஸ் மற்றும் லூனார் போலார் எக்ஸ்ப்ரோரேஷன் போன்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.  இவை மட்டுமில்லாமல் சந்திராயன் 1-ன் டேட்டா யுட்டிலைசேசன் கீழ் 17 திட்டங்களையும், மார்ஸ் ஆபிர்ட்டர் மிஷன் திட்டத்தின் கீழ் 28 புதிய திட்டங்களையும் வகுத்துள்ளனர். ஆஸ்ட்ரோசாட் டேட்டாவின் கீழ் 12 திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : விண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ!

செலவு, நேரம் மற்றும் அபாயத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் 55 நாடுகளுடனும் ஐந்து பலதரப்பு அமைப்புகளுடனும் இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளில் RNDயை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், ஆராய்ச்சி ஸ்பான்சர் செய்யப்பட்ட திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி மற்றும் எஸ்.பி.பி.யு, புனே, பிரீமியர் நிறுவனங்களின் செல், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையங்கள் ஆகியவற்றை (ஆர்.ஏ.சி) கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் நிறுவ பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Isros exciting new technologies and space programmes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X