Isro's GSAT-31 launched : இஸ்ரோவின் 40வது தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் 31 இன்று அதிகாலை 2.33 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில், ஐரோப்பிய ராக்கெட் ஏரியன் - 5 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
Isro's GSAT-31 launched
இந்த செயற்கைக் கொள் 2,535 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகளாகும். இந்த செயற்கைக் கோள் மூலமாக இந்தியாவின் மையப்பகுதி மற்றும் தீவுப் பகுதிகள் அதிக பயனடையும் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச், டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றிற்கும் இந்த செயற்கை கோள் அதிக அளவில் பயனுடையதாக இருக்கும்.
கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவின் ஜிசாட்-11 செயற்கைக் கோள் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது போல், இந்த மாதம் ஜிசாட் 31 விண்ணில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இரண்டே மாதங்களில் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது இஸ்ரோ செயற்கைக் கோள் என்ற பெருமையை பெறுகிறது ஜிசாட் 31.
மேலும் படிக்க : தமிழகத்தில் அமைய இருக்கும் இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனங்கள்