Advertisment

சிறப்பு விண்வெளி ஆய்வுக் கூடம், எக்ஸ்ரே டெலஸ்கோப்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி- சி58

இஸ்ரோவின் முதன்மையான எக்ஸ்போசாட் ( XPoSat) செயற்கைக் கோள் உடன் 10 செயற்கைக் கோள்கள் இன்று (ஜன.1) பி.எஸ்.எல்.வி- சி58 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
XpoSat IS.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது முதல் எக்ஸ்போசாட் ( XPoSat)  செயற்கைக் கோள் மற்றும் பிற 10 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி- சி58  ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள்கள் நிர்ணயிக்கப்பட்ட பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 

Advertisment

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (திங்கள்கிழமை) காலை 9.10 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

(இஸ்ரோ) 2024 புத்தாண்டை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. ராக்கெட்  ஏவப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் “புத்தாண்டு தொடங்கியது. எக்ஸ்போசாட் வெற்றிகரமாக விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது” என்று தெரிவித்தார். 

இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக் கோளை கொண்ட 2-வது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.

எக்ஸ்போசாட் ( X-ray Polarimeter Satellite (XpoSat) செயற்கைக் கோள் கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது. எக்ஸ்போசாட் 5 ஆண்டுகாலம் விண்வெளியில் இருந்து கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும். இது 469 கிலோ எடை கொண்டது. 

முன்னதாக, 2021-ம் ஆண்டு  நாசா கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆய்வு செய்ய இமேஜிங் எக்ஸ்ரே போலரிமெட்ரி எக்ஸ்ப்ளோரர் (IXPE)  என்ற செயற்கை கோளை முதல் முதலில் அறிமுகப்படுத்தியது.  இது soft X-ray band வகையை சேர்ந்தது. அதேசமயம் XPoSat  மீடியம் எக்ஸ்ரே பேண்டிற்குள் செயல்படும்.

இது இரண்டு பேலோடுகளைக் கொண்டு செல்லும் - POLIX (எக்ஸ்-கதிர்களில் உள்ள போலரிமீட்டர் கருவி) மற்றும் XSPECT (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் டைமிங்). 

இஸ்ரோவின் கூற்றுப்படி, POLIX வெவ்வேறு வகைகளில் சுமார் 40 பிரகாசமான வானியல் ஆதாரங்களைக் கவனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; XSPECT ஆனது வெவ்வேறு பொருட்களால் உருவாக்கப்படும் மின்காந்த நிறமாலையை ஆய்வு செய்யும்.

XPoSat சமீபத்தில் தொடங்கப்பட்ட சூரிய மிஷன் ஆதித்யா-எல் 1 மற்றும் 2015 இல் தொடங்கப்பட்ட ஆஸ்ட்ரோசாட் ஆகியவற்றிற்குப் பிறகு நாட்டின் மூன்றாவது விண்வெளி அடிப்படையிலான ஆய்வகமாக உள்ளது. 

மங்கள்யான் திட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி எஸ் சீதா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்,  "இது ஒரு சிறந்த நடவடிக்கை, உண்மையில், மிகப்பெரியது. அறிவியல் செயற்கைக் கோள்களின் வழக்கமான ஸ்ட்ரீம்களை நாம் வைத்திருக்க வேண்டும், குறைந்தது வருடத்திற்கு ஒன்று என இருக்க வேண்டும்" என்று கூறினார்.

உலகம் முழுவதும், எக்ஸ்ரே துருவமுனைப்பு அளவீடுகளில் (polarisation measurements) ஒரு சில கருவிகள் மட்டுமே உள்ளன. இவற்றில் சில நாசா மற்றும் அவர்களுடன் இணைந்த நாடுகளிடையே மட்டுமே உள்ளன. இவைகளும் பலூன் அடிப்படையிலான மற்றும் குறுகிய கால சோதனைகளாகும். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/isros-new-year-launch-special-space-observatory-x-ray-telescope-9090034/

இந்திய வானியலாளர்கள், ஆஸ்ட்ரோசாட்டைப் பயன்படுத்தி, எக்ஸ்ரே மூலங்களின் நேரம் மற்றும் பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபியை மேற்கொண்டனர், ஆனால் துருவமுனைப்பு ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே இந்த துறையில் எக்ஸ்போசாட் நிச்சயம் கேம்சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment