இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனையை நேற்று (அக்.21) வெற்றிகரமாக மேற்கொண்டது. நேந்று 3 முறை சோதனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இறுதியாக காலை 10 மணியளவில் மாதிரி விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படுவதற்கான க்ரூ எஸ்கேப் சிஸ்டத்திற்கான சோதனை நடைபெற்றது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சோதனை ராக்கெட் டிவி-டி1 மூலம் விண்கலம் ஏவப்பட்டது. க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சோதனையானது அவசரகாலத்தில் ஏவுகணை வாகனத்திலிருந்து விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது இந்த சோதனையின் நோக்கமாகும்.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா (சோவியத் யூனியன்) மற்றும் சீனா ஆகிய நாடுகள் தான் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. இந்தியா ககன்யான் திட்டத்தின் முதல் இந்தப் பட்டியலில் இணைய தீவிரம் காட்டி வருகிறது.
முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் பிரதமர் மோடி இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, 2035-க்குள் இந்தியா சொந்தமாக விண்வெளி நிலையம் உருவாக்க வேண்டும். 2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எனினும் இதற்கான பாதைகளை நீளமானது. இந்தநிலையில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயணத்தின் முதல் பகுதியில் இஸ்ரோ தனது முதல் சில அடிகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் சோதனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, ஏனெனில் இஸ்ரோ விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்துகிறது. ஏவுதலின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், க்ரூ எஸ்கேப் சிஸ்டம், ஏவுகணை வாகனத்தில் இருந்து வீரர்கள் இருக்கும் குழு தொகுதியை (crew module) பிரித்து, விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கச் செய்யும்.
ராக்கெட் ஏவுதலின் போது க்ரூ மாட்யூல் பணி தொடங்கும். இஸ்ரோவின் சக்திவாய்ந்த ராக்கெட்டான எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். எல்.வி.எம் 3 ராக்கெட் புவியீர்ப்பு விசையை விட நான்கு மடங்கு acceleration உடன் விண்வெளியை நோக்கி பறக்கும். இந்த நேரத்தில், குழு தொகுதி விண்வெளி வீரர்களை massive air friction மற்றும் அது உருவாக்கும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும்.
ஆனால் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் விண்வெளி வீரர்கள் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும்போது மட்டுமே அவர்களைப் பாதுகாக்கும். விண்வெளியில் இருக்கும்போது, இது பயன்படாது. விண்வெளியில் க்ரூ மாட்யூல் மட்டுமே விண்வெளி வீரர்களை பாதுகாக்கும். அதனால் வீரர்கள் இருக்கும் குழு தொகுதி மிகுந்த பாதுகாப்போடு செய்யப்படும். பல கட்ட சோதனைகளுக்கும் இனி வருங்காலங்களில் உட்படுத்தப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/watch-this-space-isros-tv-d1-success-gaganyaan-8994579/
இது குறைந்த புவி சுற்றுப்பாதையில் பூஜ்ஜிய-காற்று, மைக்ரோ கிராவிட்டி சூழலில் இருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வேண்டும். இது விண்வெளி வீரர்களை சூரியனின் தீவிர கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
டிவி-டி1 ஆனது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சோதனை ராக்கெட்டாகும். வீரர்களை வைத்து அனுப்பபடும் எல்.வி.எம் 3 போலவே அதே எடை, அதே அளவு கொண்ட ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டது. இந்த சோதனையின் போது க்ரூ மாட்யூலின் unpressurised version சோதிக்கப்பட்டது. ஆனால் உண்மையான ககன்யான் திட்டத்தில் வீரர்கள் சுதந்திரமாக வாழ, சுவாசிக்க கூடிய வகையில் pressurised விண்கலத்தை இஸ்ரோ பயன்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“