நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) சர்வதேச விண்வெளி மையத்தை மே 14 வரை வானில் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. அதோடு "வானத்தில் 3-வது பிரகாசமாக இருக்கும் பொருள் விண்வெளி மையம், இதை எப்போது பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால் அதை நீங்கள் எளிதாக கண்டறியலாம்" எனத் தெரிவித்துள்ளது.
நாசா கூற்றுப்படி மே 8-ம் தேதி முதல் மே 23 வரை வானில் வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனக் கூறியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கோவை, உதகை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மே 14 வரை வானில் காண முடியும் எனக் கூறியுள்ளது.
அதோடு சர்வதேச விண்வெளி மையத்தை எப்போது காண முடியும் என்ற நேரத்தையும் நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மே 12-ம் தேதி காலை 4.14 மணிக்கு காணலாம். அப்போது 4 நிமிடங்கள் தெரியும். அதே போல் மாலையில் 7:08 மணிக்கு மீண்டும் பார்க்க முடியும். அப்போது 4 நிமிடங்களுக்கு அது தெரியும்.
மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் முறையே காலை 5:00 மற்றும் 4:14 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தை வானில் காணலாம். மே 13-ம் தேதி, விண்வெளி நிலையம் வானில் 6 நிமிடங்களும், மே 14-ம் தேதி வெறும் மூன்று நிமிடங்களும் தெரியும்.
மே 13 அன்று, இது NW மேலே 10° தோன்றும் மற்றும் SSE மேலே 10° மறைந்துவிடும், மே 14 அன்று, அது ESE-க்கு மேல் 59° தோன்றும் மற்றும் SEக்கு மேல் 10° மறைந்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“