சிறுகோள் மீது நாசாவின் விண்கலம் மோதி வெற்றி: அரிய நிகழ்வின் புகைப்படம் வெளியீடு | Indian Express Tamil

சிறுகோள் மீது நாசாவின் விண்கலம் மோதி வெற்றி: அரிய நிகழ்வின் புகைப்படம் வெளியீடு

பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட டிமார்போஸ் சிறுகோள் மீது நாசாவின் டார்ட் விண்கலம் நேற்று வெற்றிகரமாக மோதி, திசை திருப்பியது.

சிறுகோள் மீது நாசாவின் விண்கலம் மோதி வெற்றி: அரிய நிகழ்வின் புகைப்படம் வெளியீடு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. புது முயற்சிகளை செய்து வருகிறது. இந்தநிலையில் பூமியைத் தாக்கும் சிறுகோள் குறித்து ஆய்வு செய்தது. மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்று குறித்தும் ஆய்வு செய்தது.

அந்தவகையில் டார்ட் என்ற விண்கலனைப் பயன்படுத்தி சிறுகோளை திசை திருப்பும் முயற்சியில் நாசா ஈடுபட திட்டமிட்டது. இந்த முயற்சி சிறுகோள் மீது டார்ட் விண்கலத்தை வேகமாக மோதச் செய்து திசை திருப்புவதாகும். அதன்படி நேற்று நாசா சோதனை மேற்கொண்டது. டிமார்போஸ் (Dimorphos) சிறுகோள் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் நேற்று செப்டம்பர் 27 காலை 4.44 மணியளவில் வெற்றிகரமாக மோதியது.

இந்தநிலையில், இந்த அரிய நிகழ்வை இத்தாலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது LICIACube-இல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் டிமார்போஸின் அமைப்பு மற்றும் வடிவத்தை ஆராய விஞ்ஞானிகளுக்கு முக்கியமானதாக இருக்கும். சிறுகோளைத் திசைதிருப்புவதில் டார்ட் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதைக் கண்டறியவும் இது உதவும் என்று தெரிவித்துள்ளது. தற்போது 3 புகைப்படங்கள் வெளியிடப்பட்ட நிலையில் வருங்காலங்களில் மேலும் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டார்ட் முயற்சியின் மூலம் சிறுகோளை அதன் சுற்றுப்பாதையில் இருந்து சற்று திசைதிருப்பி இருக்க வேண்டும் என நாசா கூறுகிறது. தற்போது டிடிமோஸ் அமைப்பை சுற்றிவரும் டிமார்போஸ் பூமியிலிருந்து 11 மில்லியன் கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் அனுப்பபட்ட தொலைநோக்கிகள் அதை கண்காணித்து வருகிறது. டார்ட் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டார்ட் சோதனை எவ்வளவு தூரம் பயனளித்தது என அதன் தரவுகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

டிமார்போஸ் தற்போது பூமிக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றாலும், டார்ட் சோதனை முயற்சி வருங்காலங்களில் பயனளிக்கும் வகையில் ஆய்வு செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Italian space agency releases liciacube images of dart crash