பிராண்ட் போன்களுக்கு டஃப்.. ரூ.10,000 பட்ஜெட்டில் மேக்ஸிமம் பெர்ஃபாமன்ஸ்!

ஐடெல் நிறுவனம், தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனான "ஐடெல் ஜெனோ 5ஜி"யை (Itel Zeno 5G) விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள், விலை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஐடெல் நிறுவனம், தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனான "ஐடெல் ஜெனோ 5ஜி"யை (Itel Zeno 5G) விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள், விலை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
itel-zeno-5g

பிராண்டட் போன்களுக்கு டஃப்.. ரூ.10,000 பட்ஜெட்டில் மேக்ஸிமம் பெர்ஃபாமன்ஸ்!

இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை களமிறக்கிவரும் ஐடெல் நிறுவனமானது, IP54 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, வாய்ஸ் அசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், 100 நாட்களுக்கான ப்ரீ ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் கொடுக்கும் ஐடெல் ஜெனோ 5ஜி (itel Zeno 5G) போனை களமிறக்க உள்ளது. இந்த போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள், விலை விவரங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

ஜூன் 10-ம் தேதி வெளியாக இருக்கும் இந்த ஐடெல் ஜெனோ 5ஜி போனானது, அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System), IP54 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏஐவானா ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Aivana AI Voice Assistant) வருகிறது. டிஸ்பிளேவுக்கு 100 நாட்கள் வரையில் ப்ரீ ஸ்கிரீன் ரீப்ளேஸ்மென்ட் உள்ளது. 7.8 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 

Advertisment
Advertisements

எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்:

டிஸ்ப்ளே: 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட்.

ப்ராசஸர்: MediaTek Dimensity 6300 சிப்செட், அன்றாட பயன்பாடுகள் மற்றும் கேமிங்கிற்கு சிறப்பானதாக இருக்கும்.

கேமரா: ஐடெல் ஜெனோ 5ஜி, 50MP பிரதான சென்சார் கொண்ட டூயல் பின்புற கேமரா. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா இருக்கலாம்.

பேட்டரி: 5000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி, ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் 

மெமரி மற்றும் சேமிப்பு: 4GB ரேம்+128GB. மெய்நிகர் ரேம் (Virtual RAM) நீட்டிப்பு வசதியும் இதில் இடம்பெறலாம்.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 14 அல்லது ஆண்ட்ராய்டு 15 (கோ எடிஷன்) இயங்குதளத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற அம்சங்கள்: IP54 மதிப்பீடு, இரட்டை 5ஜி சிம் ஆதரவு, கைரேகை சென்சார், Aivana AI வாய்ஸ் அசிஸ்டன்ட்

ஐடெல் ஜெனோ 5ஜி போனின் விலை சுமார் ₹9,999 ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமேசான் பக்கம் நேரலைக்கு வந்துள்ளதால், இம்மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

5G Smartphones Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: