வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024 உடன் முடிவடைந்தது. வரி செலுத்துவோர் பலரும் வருமான வரித் தாக்கல் செய்து ரீஃபண்ட் பணத்திற்காக காத்திருப்பர்.
பொதுவாக சம்பளம் பெறுபவர்களுக்கு ஒரு வாரங்களில் ரீஃபண்ட் தொகை வந்துவிடும். இருப்பினும் இன்னும் ரீஃபண்ட் தொகை வராமல் இருந்தால், அதை ஆன்லைன் செக் செய்யலாம்.
அனைத்து ஆவணங்களும் முறையாக கொடுக்கப்பட்டிருந்தால், ஐ.டி.ஆர் சரியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் இதை செய்து பார்க்கலாம்.
இதற்கு, முதலில் 1. வருமான வரி இணையத் தளப் பக்கத்திற்கு செல்லவும். 2. ஹோம் பக்கத்தில் உங்கள் பான் எண், பாஸ்வேர்ட் கொடுக்கவும்.
3. இப்போது My Account செக்ஷன் செல்லவும். 4. இதில், Refund/Demand Status பட்டனை கிளிக் செய்தால், உங்களின் ஐ.டி.ஆர் நிலை பற்றி விவரங்கள் தெரிந்து விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.