Advertisment

இந்த மாதம் மட்டும் இத்தனை போன்களா!.. ஜனவரியில் அறிமுகமாகும் முன்னணி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள்

சாம்சங், ஒன் பிளஸ், ரெட்மி உள்ளிட்ட நிறுவனங்கள் புத்தாண்டின் முதல் மாதத்தில் தங்களின் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்கின்றன.

author-image
WebDesk
New Update
From Oneplus Nord to VivoV20 best smartphone in 2020 under Rs 25000 Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024 புத்தாண்டின் முதல் மாதத்தில் ஜனவரியில் சாம்சங், ஒன் பிளஸ், ரெட்மி உள்ளிட்ட முன்னணி ப்ராண்டுகளிடமிருந்து பட்ஜெட், மிட் ரேஞ், பிரீமியம் வகை போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.  சாம்சங் எஸ்24 சீரிஸ் மற்றும் ஒன் பிளஸ் 12  சீரிஸ் ஆகியவை பிரீமியம் வகை ஸ்மார்ட் போன்களாக இருக்கும். 

Advertisment

சாம்சங் எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) 

சாம்சங் எஸ்24 சீரிஸில் 3 மாடல் போன்கள் எஸ்24, எஸ்24 ப்ளஸ், எஸ்24 அல்ட்ரா ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த போன்கள் Snapdragon 8 Gen 3 ப்ராசஸர், கேமரா அமைப்பில் (அல்ட்ராவில் 200MP ப்ரைமரி சென்சார் உட்பட)  மிகவும் நேர்த்தியான கேமரா அமைப்பு கொண்டுள்ளது. ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 சீரிஸ் (OnePlus 12 Series) 

ஒன்பிளஸ் அதன் அடுத்த முதன்மையான ஒன்பிளஸ் 12 மற்றும் 12ஆர் ஆகிய இரண்டு வகைகளை பிரீமியம் வகை போன்களை இந்த ஜனவரியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 23-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

மிட் ரேஞ் போன்கள்

ரெட்மி நோட் 13 சீரிஸ் -  ஜியோமியின் பிரபலமான பட்ஜெட் தொடரான Note 13 தொடருடன் மேம்படுத்தப்பட்ட போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் ஆகிறது. 

Poco X6 சீரிஸ்-  ஜியோமியின் துணை பிராண்டான Poco, அதன் X6 சீரிஸை ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஃபோன்கள் பணத்திற்கான வலுவான மதிப்பை வழங்குகின்றன.

விவோ X100 சீரிஸ் :  விவோ X100 சீரிஸ் அதன் நேர்த்தியான வடிவமைப்பு, வளைந்த AMOLED டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 9300 சிப்செட் ஆகியற்றை கொண்டுள்ளது. 

எக்ஸ்100 ப்ரோ மாறுபாடு கூடுதல் கேமரா அம்சங்கள் மற்றும் வேகமான சார்ஜிங் திறன்களைக் கொண்டுள்ளது.  ஜனவரி 4-ம் தேதி ரெட்மி உடன் இந்த போனும் வெளியாகிறது. 

மற்ற ப்ராண்ட் போன்கள்

Asus ROG Phone 8 Series- பிரத்யேக கேமிங் அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு உடன் இந்த மாதம் Asus ROG   8 Series போன் அறிமுகம் செய்யப்படுகிறது. 

iQOO Neo 9 Series, Honor X9b ஆகிய போன்களும் இந்த வரிசையில் ஜனவரி மாத வெளியீட்டிற்கு காத்திருக்கும் பட்ஜெட் போன்களாகும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment