105 ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் ஜாவா பைக்குகள்... Bobber பைக்கிற்கு இணையான வடிவமைப்பில் பேரக் பைக்குகள்

ஜாவா & ஜாவா 42 மாடல்களை விட நீளமாகவும், குள்ளமாகவும் இருக்கும் பேரக் மாடல்

Jawa Perak : 1960களில் மோட்டர் சைக்கிள்கள் என்றாலே இந்திய இளைஞர்களின் கண்ணையும் நெஞ்சையும் கவர்ந்தது ஜாவா பைக்குகள் தான். அந்த காலத்தில் வெளியான ஜாவா 250 டைப் A பைக்கின் அதே மாடலை பின்பற்றி 2018ம் ஆண்டில் மீண்டும் ஜாவா இந்திய நகரங்களுக்குள் நுழைய இருக்கிறது.

Jawa Perak  சிறப்பம்சங்கள்

உலக அளவில் பாப்பர் பைக்குகள் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அதே போன்ற வடிவமைப்பில் வெளியாகிறது ஜாவா பேரக். ஜாவா, மற்றும் ஜாவா 42 மாடல்களை விட நீளமாகவும், குள்ளமாகவும் இருக்கும் பேரக் மாடல் பைக்குகள்.

முழுக்க முழுக்க மேட் பினிசிங்கோடு வெளியாகும் இந்த பைக்கின் விலை 1.89 லட்சம் ஆகும். ஒற்றை இருக்கை, மோனோஷாக் சஸ்பென்சன், முக்கோண வடிவிலான பக்கவாட்டு வடிவமைப்பு, சின்ன ஃபெண்டர், PeaShooter exhaust Pipe போன்றவற்றை கொண்டு கிளாசிக் லுக்குடன் களம் இறங்க உள்ளது பேரக்.

பேரக்கில் 334 cc இன்ஜின் பொருத்தபட்டுள்ளது. இது 30 bhp பவரையும், 31 Nm டார்க்கை உருவாக்கும் செயல் திறன் கொண்டவை. ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ்ஸுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது பேரக்.

எடை 170 கிலோ கொண்டுள்ள பேரக் 10 நொடிகளுக்குள் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்ன ஜாவாவிற்கு அப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் :

வட்டமான ஹாசோஜன் ஹெட்லைட், அதற்கு மேலே அழகாய் பொருத்தப்பட்டிருக்கும் அனலாக் ஸ்பீடோமீட்டர், 14 லிட்டர் பெட்ரோல் டேங் க்ரோம் ஃபினிஷிங் டச்சினைக் கொண்டிருக்கிறது. சிங்கிள் பீஸ் சீட்டுடன் வரும் இந்த ஜாவாவில் தடிமனான டெலிஸ்கோபிக் ஃபோர்க், இரண்டு PeaShooter exhaust Pipe, மற்றும் பின்ஸ்ட்ரைப் உடனான மட்கார்ட் என 1960களில் வந்த அதே டிசனை அப்படியே ஜாவாவின் லேட்டஸ்ட் பேக்கேஜாக அறிமுகப்படுத்த உள்ளது.

க்ளாசிக் லெஜண்ட்ஸ் – மஹிந்திரா கூட்டணி

இந்தியாவில் ஜாவா மோட்டர் சைக்கிள்களுக்கான உரிமையைப் பெற்றுள்ளது க்ளாசிக் லெஜெண்ட்ஸ். ஆனந்த் மகிந்திரா, போமன் இரானி, மற்றும் அனுபம் தரேஜா போன்றோர் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் க்ளாசிக் லெஜெண்ட்ஸ். இதன் 60 % பங்குகளை மகிந்திரா நிறுவனம் கொண்டுள்ளது.

சமீபத்தில் மூன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டது க்ளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். ஜாவா (1.64 லட்சம்), ஜாவா 42 (Forty Two) (1.55 லட்சம் ), ஜாவா பேரக் (Perak)ன் விலை 1.89 லட்சம் என விலை நிர்ணயம் செய்திருக்கிறது க்ளாசிக் லெஜெண்ட்ஸ். அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் வெளியாகின்றன. அதன் பின்பு ஜாவா பேரக் மோட்டர் வெளியாக உள்ளது.

டீலர்கள்

105 டீலர்ஷிப்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 65 டீலர்ஷிப்புகளை உருவாக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது மகிந்தரா. பேரக் விற்பனை மட்டும் தாமதம் ஆகும்.

டெல்லியில் கிருஷ்ணா நகர், குஜ்ரன்வாலா டவுன், சகேட், திலக் நகர் போன்ற இடங்களிலும் மும்பை நகரில் அந்தேரி (மேற்கு), செம்பூர், தானே மற்றும் வஷி ஆகிய இடங்களிலும், ஹைதராபாத்தில் ரனிகுஞ், பஞ்சாரா ஹில்ஸ் ரோட், கச்சி பௌவுலி, குகட்பள்ளி ஆகிய இடங்களிலும், புனே நகரில் பனேர், கோரேகான் பார்க் மற்றும் சிஞ்ச்வாட் நிலையம் ஆகிய இடங்களிலும் டீலர்கள் இந்த பைக்குகளை விற்க உள்ளனர்.

பெங்களூருவில் 5 இடங்களிலும், சென்னையில் 4 இடங்களிலும் ஜாவா சோரூம்கள் திறக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close