இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய டெலிகாம் ஆபரேட்டர்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளன. 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், ஜியோ இரண்டு விலை குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.10 விலை வித்தியாசத்தில் ஜியோ 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரண்டு திட்டங்களில், ரூ.239 ரீசார்ஜ் திட்டம், சற்று விலை குறைந்ததாக இருக்கும்.
இருப்பினும் இது அதிக டேட்டாவை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, ரூ.249 திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இருப்பினும், ஜியோவின் ரூ.239 ரீசார்ஜ் திட்டம் 22 நாட்கள் அல்லது மூன்று வாரங்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, ரூ.249 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் அல்லது நான்கு வாரங்கள் செல்லுபடியாகும்.
மொத்தத்தில், ஜியோவின் ரூ.239 திட்டம் 33 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ரூ.249 திட்டம் 28 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் காலிங் வசதி, ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சந்தா வழங்குகிறது. அதே போல் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்குகிறது.
சுருக்கமாக, ஜியோவின் ரூ.249 ரீசார்ஜ் திட்டம் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி தேவைப்படுபவர்களுக்காகவும், தங்கள் ஃபோன் எண்ணை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு ஆகும்.
ரூ.239 திட்டம் அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்காகவும், அடிக்கடி தங்கள் ஃபோன் எண்ணை ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்கும் பயன்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“