/tamil-ie/media/media_files/uploads/2022/10/Reliance-Jio-True-5G.jpg)
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4 நகரங்களில் 5ஜி பீட்டா சோதனையை தசரா பண்டிகையை முன்னிட்டு நேற்று தொடங்கி உள்ளது.
ஜியோ True 5ஜி நெட்வொர்க் (Jio True 5G network) என்ற பெயரில் சேவையைத் தொடங்கி உள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசியில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பயனர்களுக்கு வெல்கம் ஆஃபர் (welcome offer) கொடுத்துள்ளது. அதன்படி 1ஜிபிபிஎஸ் வரை
5ஜி டேட்டா வேகத்தை பெற முடியும். அன்லிமிடட் டேட்டாவை பயனர்கள் பெறலாம்.
சிம்கார்டு மாற்றாமல் ஜியோ 5ஜி சேவை
ஜியோ 5ஜி பீட்டா சோதனைகளில் பங்கேற்கும் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டை மற்றும் போனை மாற்றாமல் 5ஜி நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்த முடியும். இந்த சோதனைகளில் பங்கேற்கும் பயனர்கள் விவரத்தை ஜியோ அறிவிக்கும். 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் உள்ள அனைத்து பயனர்களும் 5ஜி சேவை தற்போது வழங்கப்படாது. சோதனையில் பங்கேற்கும் பயனர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்துடன் கூடன் அன்லிமிடட் டேட்டா பெறுவர். சோதனையில் பங்கேற்கும் பயனர்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் அதாவது 5ஜி பேண்ட் கொண்ட போன் இருக்க வேண்டும்.
சோதனையில் பங்கேற்க அழைக்கப்படுபவர்கள் புதிய ஜியோ சிம் வாங்கத் தேவையில்லை. நிறுவனம் தாமாகவே 5ஜி சேவை பயன்படுத்தும்படி சிம்மை மேம்படுத்திக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.
700MHz லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்தும் ஒரே தொலைத் தொடர்பு நிறுவனமாக ஜியோ இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டாண்ட் அலோன் standalone (SA) முறையில் 5ஜி சேவையை பயன்படுத்தும். 5ஜிக்கென பிரத்யேக சாதனங்களுடன் சேவையை வழங்க உள்ளது.
ஜியோ 5ஜி பீட்டா சோதனையை தொடங்கினாலும், அதன் 5ஜி ரீசார்ஜ் பேக் திட்டங்கள் குறித்து விவரங்கள் வெளியிடவில்லை. வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஸ்டாண்ட் அலோன் முறையில் 5ஜி சேவை வழங்கும். அதேநேரம் மற்ற நிறுவனங்கள் ஏர்டெல், வோடபோன் ஐடியா நான்- ஸ்டாண்ட் அலோன் (Non-standalone) முறையில் 5ஜி சேவையை வழங்க உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.