Advertisment

ஒரே நாளில் 50 நகரங்கள்.. ஈரோடு, தூத்துக்குடியில் ஜியோ 5ஜி அறிமுகம்

தமிழ்நாட்டில் சில நகரங்கள் உள்பட 50 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
ஜியோவின் புதிய போஸ்ட்பெய்ட் திட்டம்:  ஃபேமிலி பயனர்களுக்கான அசத்தல் ஆஃபர்

Jio 5G 50 Cities | Jio announces largest ever 5g release across 50 cities in India | இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் தொடங்கி தற்போது படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் சேவை வழங்கி வருகின்றன. ஜியோ ஸ்டாண்ட் அலோன் (Standalone) முறையிலும் ஏர்டெல் நான்-ஸ்டாண்ட் அலோன் (Non-Standalone) முறையிலும் சேவை வழங்குகின்றன.ஏர்டெல் தனது 5ஜி சேவைகளை ஏர்டெல் 5ஜி பிளஸ் என்றும், ஜியோ ட்ரூ 5ஜி என்ற பெயரிலும் வழங்கி வருகின்றன. ஜியோ இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி நேற்று (ஜனவரி 24) ஒரே நாளில் 50 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தியுள்ளது. 17 மாநிலகளில் 50 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மூன்று நகரங்கள் மற்றும் புதுச்சேரி உள்பட 50 நகரங்களில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம்184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நகரங்களில் இலவசமாக ஜியோ 5ஜி பயன்படுத்தலாம். ஜியோவின் வெல்கம் ஆஃபர் மூலம் 5ஜி இலவசமாக வழங்கப்படுகிறது.

Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment