இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதற்கட்டமாக 5ஜி சேவையை சில நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளன.
மற்ற நகரங்களில் படிப்படியாக சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தநிலையில் பயனர்கள் பலருக்கும் நமது ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஏர்டெல் 5ஜி பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புது சிம் கார்டு வாங்க தேவை இல்லை என அறிவித்துள்ளன. இது ஒருபுறம் இருக்க 5ஜி நெட்வொர்க்கில் யார் ஸ்பீடு என்ற போட்டியும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் பதிவேற்ற வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ விநாடிக்கு 600 மெகாபிட் வேகமும், பார்தி ஏர்டெல் 516 வேகமும் உள்ளது என பிரபல பிராண்ட் பேண்ட் ஆராய்ச்சி நிறுவனமான ஓக்லா தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ கொல்கத்தா, டெல்லி, மும்பை, வாரணாசி உள்ளிட்ட 4 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. பார்தி ஏர்டெல், டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி என 8 இடங்களில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil