Jio best offers: ரிலையன்ஸ் ஜியோ அதன் 8-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைளை வழங்கி உள்ளது. ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு கூடுதல் டேட்டா வசதி, அஜியோ, சொமேட்டோ ஆஃபர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.
புதிய ஓ.டி.டி பேக்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜியோ ரூ.175 விலையில் புதிய ஓ.டி.டி பேக் அறிமுகம் செய்துள்ளது. இதில் 10 ஓ.டி.டி தளங்களுக்கான அணுகல் மற்றும் 10 ஜிபி டேட்டா வவுச்சர் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
கூடுதலாக, ஜியோ அஜியோவுடன் இணைந்து ரூ. 2,999 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ. 500 தள்ளுபடியை வழங்குகிறது.
மேலும் உணவுப் பிரியர்களுக்காக குறிப்பிட்ட சில திட்டங்களில் ஜியோ பயனர்கள் 3 மாத Zomato கோல்ட் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெறுவார்கள். இதுபோன்று ரூ.899, ரூ.999 திட்டத்திலும் ஜியோ சலுகைகளை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“