ஜியோவுக்கு எகிறும் பயனர்கள் எண்ணிக்கை.. 8 லட்சம் மட்டும் பெற்ற ஏர்டெல்!

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூன் மாதத்தில் 42 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் 7.9 லட்சம் புதிய பயனர்களை மட்டுமே பெற்றுள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.

ஜியோவுக்கு எகிறும் பயனர்கள் எண்ணிக்கை.. 8 லட்சம் மட்டும் பெற்ற ஏர்டெல்!

இந்தியாவின் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா, பிஎஸ்என்எஸ் ஆகியவை உள்ளன. இந்தநிலையில்TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) ஜூன் மாதத்திற்கான புது பயனர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, “அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதத்தில் 4.2 மில்லியன் (42 லட்சம்) பயனர்களைப் பெற்றுள்ளது. மற்ற போட்டி நிறுவனங்ககளின் பயனர்கள் எண்ணிக்கை விட அதிகம். ஏர்டெல் சில புதிய பயனர்களை மட்டும் பெற்றுள்ளது, ஆனால் ஜியோவைப் போல அதிகம் இல்லை.

ஏர்டெல் 8 லட்சம் (7,93,132) புதிய பயனர்களை பெற்றுள்ளது. எம்டிஎல், பிஎஸ்என்எல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட பிற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். அதாவது, மற்ற நெட்வொர்க் ஜியோ, ஏர்டெலுக்கு மாறியுள்ளனர்.

ஜூன் மாதம் இறுதி கணக்கெடுப்பின்படி 114.739 கோடி வயர்லெஸ் பயனர்கள் உள்ளனர். கடந்த மே மாதம் 114.550 கோடி பயனர்கள் இருந்தனர். 90% வயர்லெஸ் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான பங்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமும், 10% பங்கு மட்டுமே பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனம் (அரசிடம்) உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் கடந்த ஜூன் மாதத்தில் 13 லட்சம் பயனர்களை இழந்துள்ளது.

ஜூன் மாத இறுதியில், ரிலையன்ஸ் ஜியோ 42 லட்சம் வயர்லெஸ் பயனர்களின் நிகர அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஜியோ 41.3 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இது 36 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக ஏர்டெல் நிறுவனம் 7.9 லட்சம் வயர்லெஸ் பயனர்களின் நிகர வளர்ச்சியுடன் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகியவை முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களாக உள்ளன. இவ்விரண்டு நிறுவனங்களிடையே மட்டுமே போட்டி என்று கூறலாம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டும் வளர்ச்சியை சந்தித்து வருகின்றன.

மறுபுறம், 25.6 கோடி மொத்த பயனர்கள் எண்ணிக்கையுடன் 3வது இடத்தில் வோடாஃபோன் ஐடியா உள்ளது. இருப்பினும் 18 லட்சம் வயர்லெஸ் சந்தாதாரர்களை இது இழந்துள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Jio adds 42 lakh new users in june airtel gains only 7 9 lakh new users

Exit mobile version