இந்திய டெலிகாம் நிறுவனங்கள் விலையை போட்டிப்போட்டு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1 ரூபாய்க்கு மிகவும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் பிளானில் 100 MB மொபைல் டேட்டா கிடைக்கிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் அந்த 100 MB டேட்டாவை பயன்படுத்திய பின்னர் அவர்களது இணைய இணைப்பின் வேகம் நொடிக்கு 65 கிலோபிட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தேவைப்பட்டால் ஒரே நேரத்தில் பல 1 ரூபாய் திட்டங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். முதல் திட்டத்தில் 100 எம்.பி காலியானதும், அடுத்த திட்டம் அப்ளையாகிவிடும். அப்போது, நீங்கள் தடையின்றி இணையத்தில் 4ஜி வேகத்தில் உபயோகிக்கலாம். இந்த 1 ரூபாய் திட்டம், நீண்ட நேரம் ஆன்லைனில் இல்லாதவர்களுக்கு அல்லது குறைவான அளவிலே டேட்டா உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த திட்டம் ஜியோவின் 15 ரூபாய்க்கு 1 ஜிபி திட்டத்தை காட்டிலும் மலிவானது ஆகும். 1 ரூபாய் திட்டத்தில் தொடர்ந்து 10 முறை ரீசார்ஜ் செய்தால், நீங்கள் 10 ரூபாய்கே 1 ஜிபி டேட்டாவை எளிதாக பெற்றுவிடலாம். 5 ரூபாய் மீச்சம் ஆகிறது.
இந்த 1 ரூபாய் திட்டத்திலும் அம்பானி ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். இந்தத் திட்டம் அனைவருக்கும் கிடைக்காது. MyJio செயலியில் ‘Value’பிரிவில் ‘Other Plans’டேப்பில் இத்திட்டம் இருந்தால் மட்டுமே நீங்கள் உபயோகிக்க முடியும்.
1 ரூபாய் திட்டத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி
இந்த திட்டத்தின் தகுதியுடைய பயனாளர் பட்டியிலில் நீங்கள் இருக்கீறிர்களா என்பதை அறிய, முதலில் செல்போனில் மை ஜியோ செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
மை ஜியோ செயலில் முதலில் ரீசார்ஜ் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
அடுத்தாக, மேலே உள்ள டாப் பாரில் ‘வேல்யூ’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, திரையில் தோன்றும் வேல்யூ ஆப்ஷனில் Other Plans டேபை தேர்வு செய்ய வேண்டும். அதில், நீங்கள் 1 ரூபாய் திட்டத்தை காணமுடியும்.
பின்னர், எப்போதும் போல பேமெண்ட் செய்து ரீசார்ஜ் பிளேனை மேற்கொள்ளலாம். ஒரிரு நிமிடத்தில், பிளேன் ஆக்டிவேட் செய்யப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil