ரிலையன்ஸ் ஜியோ முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஜியோ மொபைல் இன்டர்நெட் சேவை, BroadBand உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜியோ ஏர்ஃபைபர், 5G FWA (நிலையான வயர்லெஸ் அணுகல்) சேவையானது செப்டம்பர் 19, 2023 அன்று தொடங்கப்பட்டது.
இந்த சேவை ஜியோ ஃபைபர் சேவையை விட சற்று விலை அதிகம். மேலும், ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களுடன் வரும் டேட்டா தொகுப்பும் குறைவாக உள்ளன. ஃபைபர் திட்டத்தை தேர்வு செய்ய
வேண்டுமா அல்லது ஏர்ஃபைபர் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமா என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால், இங்கே இரண்டுக்குமான ஒப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஏர்ஃபைபர்- ஜியோ பைபர்
ஜியோ ஏர்ஃபைபர் என்ட்ரி லெவல் திட்டம் மாதத்திற்கு ரூ.599க்கு வருகிறது. அதேசமயம் ஜியோ பைபர்
என்ட்ரி லெவல் திட்டம் மாதத்திற்கு ரூ.399க்கு வருகிறது. இரண்டிலும் ரூ.200 வித்தியாசம் உள்ளது. வரிகளைச் சேர்த்தால், வித்தியாசம் இன்னும் அதிகமாகும். ரூ.599 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 30 Mbps வேகத்தை மட்டுமே வழங்குகிறது.
இந்த திட்டத்தில் 1TB அல்லது 1000ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால், ஜியோ ஏர்ஃபைபரிலிருந்து ரூ.401 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.599 திட்டம், 30 Mbps வேகம் மற்றும் 1TB டேட்டாவை வழங்கினாலும், அதன் கூடுதல் நன்மைகள் காரணமாக பயனர்கள் இந்த திட்டத்தை விரும்பக்கூடும். இந்தத் திட்டத்தில் 13 OTT (ஓவர்-தி-டி0பி) நன்மைகள் உள்ளன. JioCinema, SonyLIV, Disney+ Hotstar, Lionsgate Play, ZEE5, Discovery+, Hoichoi, SunNXT, ShemarooMe, Docubay, ALTBalaji, Eros Now மற்றும் Epic On ஆகிய தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம்.
புதிய ஜியோ ஏர்ஃபைபர் பயனர்கள் விரும்பினால், 6 அல்லது 12 மாதங்களுக்கு ரூ.599 திட்டத்தையும் வாங்கலாம். புதிய பயனர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஜியோ ஃபைபரைக் காட்டிலும் ஜியோ ஏர்ஃபைபர் விலை அதிகம், ஆனால் அதன் தனித்துவமான பலன்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வயர் ஃபைபர் அமைக்க முடியாத மற்றும் FTTH (ஃபைபர்-டு-தி-ஹோம்) சேவைகளை வழங்க முடியாத பகுதிகளில், ஜியோ ஏர்ஃபைபர் போன்ற 5G FWA சேவையானது பயனர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ஏர்ஃபைபர் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கு நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“