Jio AirFiber launched: அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 8 நகரங்களில் ஜியோ ஏர்ஃபைபர் அறிமுகப்படுத்தப்படுவதாக ஜியோ அறிவித்துள்ளது.
இது குறித்து, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவர் ஆகாஷ் அம்பானி, எங்கள் விரிவான ஃபைபர்-டு-தி-ஹோம் சேவையான ஜியோஃபைபர், ஏற்கனவே 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது, மேலும் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கானோர் புதிதாக இணைக்கப்பட்டுவருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து, “JioAirFiber கல்வி, சுகாதாரம், கண்காணிப்பு மற்றும் ஸ்மார்ட் ஹோம் ஆகியவற்றில் அதன் தீர்வுகள் மூலம் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் பொழுதுபோக்கு, ஸ்மார்ட் ஹோம் சேவைகள் மற்றும் பிராட்பேண்ட் மூலம் மில்லியன் கணக்கான வீடுகளை செயல்படுத்தும்” என்றார்.
இதில், 550 க்கும் மேற்பட்ட ஹெச்டி டிவி (HD TV) சேனல்கள் மற்றும் 16+ பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உட்பட பல்வேறு டிஜிட்டல் பொழுதுபோக்குகளை வழங்குகிறது. மேலும், கிளவுட் பிசி போன்ற ஸ்மார்ட் ஹோம் சேவைகளை வழங்குகிறது.
மேலும், வாடிக்கையாளர்கள் WiFi ரூட்டர், 4k ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் மற்றும் வாய்ஸ்-ஆக்டிவேட்டட் ரிமோட் ஆகியவற்றை கூடுதல் கட்டணமின்றி பெறுவார்கள் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கான நிறுவுதல் கட்டணம் 1,000 ரூபாய் ஆகும். இருப்பினும், வருடாந்திர திட்டங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
அடிப்படை திட்டங்கள் ரூ.599க்கு 30எம்பிபிஎஸ் மற்றும் ரூ.899 மற்றும் ரூ.1,199க்கு 100எம்பிபிஎஸ் விருப்பங்களை வழங்குகின்றன.
இன்னும் வேகமான வேகத்தை விரும்புவோருக்கு, ஜியோ ஏர் ஃபைபர் மேக்ஸ் திட்டங்கள் ரூ.1,499க்கு 300எம்பிபிஎஸ், ரூ.2,499க்கு 500எம்பிபிஎஸ் மற்றும் ரூ.3,999க்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குகின்றன.
ஜியோ ஏர்ஃபைபருக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- 60008-60008க்கு டயல் செய்து வாட்ஸ்அப் வழியாக இணைப்பை முன்பதிவு செய்யவும் அல்லது jio.com அல்லது அருகிலுள்ள ஜியோ ஸ்டோருக்குச் செல்லவும்.
- முன்பதிவு செயல்முறையைத் தொடங்க தேவையான விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
- உங்கள் பகுதியில் இணைப்பு இருந்தால் அதை உறுதிப்படுத்த ஜியோ அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“