Jio, Airtel, Act, BSNL Broadband Packages: தொற்றுநோய் காலகட்டத்தினால், நம்முடைய பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவு செய்துகொண்டிருக்கிறோம். சுமார் ஏழு மாதங்களாகத் தொடர்ந்து பலர், வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்கள். எதிர்காலத்திலும் கணிசமான நேரம் வீட்டிலேயே செலவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீண்ட பேண்டமிக் பயணத்தில், நம்மை பிசியாக வைத்துக்கொள்ள அதிவேக இன்டர்நெட் டேட்டா தேவைப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டுமில்லாமல் தொலைதூர நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு நேரத்தைச் செலவிடுவதற்கும் இது உதவுகிறது. இதற்கு, அதிவேக மாதாந்திர டேட்டா வழங்கும் மலிவு பிராட்பேண்ட் இணைப்பைத் தவிர வேறு எது சிறந்ததாக இருக்க முடியும். ரூ.800-க்கு கீழ் பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல் வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டம், அன்லிமிடெட் இணையம் மற்றும் உள்ளூர் / எஸ்.டி.டி அழைப்புகளை மாதத்திற்கு ரூ.499-க்கு 40Mbps இணைய வேகத்துடன் வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக், ஷா அகாடமி போன்றவற்றிற்கு இலவச அணுகலைக் கொண்ட கூடுதல் நன்மைகளும் இதில் உள்ளது. இதுதவிர, வூட் பேசிக், ஈரோஸ் நவ், ஹங்காமா ப்ளே, ஷீமரூ மீ, ஹோய்சோய் மற்றும் அல்ட்ரா என்டர்டெயின்மென்ட் தளங்களுக்கான அணுகலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் அடங்கும்.
ரூ.799 ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.799 மாதாந்திர பிராட்பேண்ட் திட்டம், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுடன் 100 Mbps இணைய வேகத்துடன் வரம்பற்ற இணையத்தை வழங்குகிறது. கூடுதலாக, விங்க் மியூசிக், ஷா அகாடமி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலி ஆகியவற்றிற்கான அணுகலையும் வழங்குகிறது.
ரூ.399 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
ரூ.939-ல் ஜியோ ஃபைபர், 30 Mbps பதிவேற்றத்துடன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் இணைய வேகத்தைப் பதிவிறக்கம் செய்து வாய்ஸ் அழைப்பு வசதியுடன் மொத்தம் 30 நாட்கள் வரை சேவை வழங்குகிறது.
ரூ.699 ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
ஜியோஃபைபர்-ன் இந்த ரூ.699 மாதாந்திர பிராட்பேண்ட் திட்டம், 100Mbps இணைய வேகம் மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச வாய்ஸ் அழைப்பு வசதியுடன் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது.
ரூ.799 ஆக்ட் ஃபைபர்நெட் பிராட்பேண்ட் திட்டம்
ரூ.799-ல் உள்ள இந்த ஆக்ட் சில்வர் ப்ரோமோ திட்டம், 1,000 GB மாதாந்திர டேட்டாவை, 1,00Mbps இணைய வேகத்துடன் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட சேவைகளோடு வழங்குகிறது. FUP-க்குப் பிறகு இதன் வேகம் 512Kbps-ஆகக் குறைகிறது. கூடுதலாக, 1,000 GB டேட்டாவையும் வழங்குகிறது. இது, மாதாந்திர சந்தா காலம் வரை செல்லுபடியாகும்.
ரூ.499 பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
ரூ.499 பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டம், 3300 GB FUP லிமிட் போஸ்டுக்கு 30 Mbps வேகத்தை வழங்குகிறது. இது இந்தியாவின் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் சேவையையும் வழங்குகிறது.
ரூ.799 பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம்
ரூ.799 பிஎஸ்என்எல் திட்டம், 3.3 TB வரை 100 Mbps வேகத்தை வழங்குகிறது. FUP வரம்பு தீர்ந்தவுடன் அதன் வேகம் 2 Mbps-ஆக குறைக்கப்படுகிறது.
டாடாஸ்ஸ்கை திட்டங்கள் ரூ.850 முதல் தொடங்குகின்றன
ரூ.800-க்கு கீழ் எந்த பிராட்பேண்ட் திட்டத்தையும் டாடாஸ்ஸ்கை வழங்கவில்லை. மாதாந்திர பிராட்பேண்ட் திட்டம் ரூ.850 முதல் தொடங்கி மாதத்திற்கு அன்லிமிடெட் டேட்டாவை, 100 Mbps இணைய வேகத்துடன் இலவச ரவுட்டர் மற்றும் லேண்ட்லைனில் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு ரூ.100 கூடுதல் கட்டணங்களோடு வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"