கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. டிவி மட்டும் அல்லாமல் ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் கிரிக்கெட் ஒளிப்பரப்பாகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்கி உள்ளது. அந்தவகையில், தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் தங்கள் பயனர்களை கவர விதவிதமான ஆஃபர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 1 ஆண்டுகள் வரை இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் - ஜியோ திட்டங்கள்
ஜியோ நிறுவனம் 3 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா சலுகைகளை வழங்குகிறது. 3 மாத இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டங்களை ஜியோ 3 வழங்குகிறது.
ரூ.499: 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் ஜியோ ஆப்ஸ் பலன்கள்.
ரூ.799: 56 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் ஜியோ ஆப்ஸ் பலன்கள்.
ஒரு வருட இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் - ப்ரீபெய்ட் ஜியோ திட்டங்கள்
ரூ.1499: 84 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2 ஜிபி டேட்டா, இலவச கால் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் ஜியோ ஆப்ஸ் பலன்கள்.
ரூ. 4199: வருடாந்திர திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் ஜியோ ஆப்ஸ் பலன்கள்.
ஏர்டெல் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டம்
ரூ.399: 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்கள் மற்றும் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசம்.
ரூ.839: 84 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்கள் மற்றும் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசம்.
ரூ.499: 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்கள் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் இலவசம்.
ரூ.599: 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்கள் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசம்.
ரூ.3359: நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்கள் மற்றும் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசம்.
Vi இலவச Disney+ Hotstar திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு திட்டங்களுடன் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசமாக வழங்குகிறது.
ரூ.499: 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்கள் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசம்.
ரூ.601: ரூ.28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, இலவச கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் பலன்கள் மற்றும் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா இலவசம்.
நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கு ஏற்ற மற்றும் சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுங்கள்.