ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஆகியவை ரீசார்ஜ் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், லட்சக்கணக்கான மக்கள் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு மாறி வருகின்றனர்.
ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஆகியவை இந்தியாவின் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களாக இருந்து வருகிறது. பி.எஸ்.என்.எல் மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமாக உள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குறிப்பாக ஜியோ, கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தி பயனர்களை அதிகளவில் ஈர்த்தது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் 2ஜி சேவையிலேயே தொடர்ந்து. மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜிக்கு முன்னேறி அடுத்தடுத்த நிலைக்கு சென்றனர்.
அதே நேரம் தங்கள் திட்டங்களின் விலையையும் உயர்த்தின. அண்மையில் இந்த நிறுவனங்கள் 25% வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. இதையடுத்து மக்கள் குறைந்த விலையில் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்-க்கு மாறி வருகின்றனர். பி.எஸ்.என்.எல் தற்போது 4ஜி சேவையை வழங்க தொடங்கியுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவை கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50லட்சம் பேர் தங்களது எண்களை பி.எஸ்.என்.எல்க்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ரூ.199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதே சேவையை பி.எஸ்.என்.எல் ரூ.108க்கு வழங்கி வருகிறது. தற்போது 4ஜி சேவையை வழங்கி வரும் பி.எஸ்.என்.எல் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“