தினமும் 2GB போதுமா? உங்களுக்கு பெஸ்ட் பிளான் எதுன்னு பாருங்க!

Jio Airtel Vi Tamilnadu 2g daily prepaid plans இங்கு பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்கள் பெரும்பாலும் ரூ.600 விலை வரம்பில் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

By: November 24, 2020, 7:50:09 AM

Jio, Airtel, Vi Special 2G Daily Data Prepaid Plans Tamil News : ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவை ஏராளமான 2 ஜிபி ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இவை அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளுடன் கூட வருகின்றன. சிறந்த திட்டத்தை வாங்குவதை எளிதாக்குவதற்காக தற்போதைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்கள் பெரும்பாலும் ரூ.600 விலை வரம்பில் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

ரிலையன்ஸ் ஜியோ: சிறந்த 2 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்கள்

நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ பயனராக இருந்தால், ரூ.444 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பெறலாம். இது ஜியோ அல்லாத எண்களுக்கு 2,000 நிமிடங்கள் மற்றும் ஜியோ நெட்வொர்க்கிற்கு அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் பெறுவீர்கள். இந்தத் திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்த டேட்டா போதுமானதாக இல்லை என்று நினைத்தால், வீட்டு ஜியோ திட்டத்திலிருந்து அடிப்படை திட்டத்தையும் வாங்கலாம். ரூ.151 டேட்டா ஆட் ஆன் பிளான் ஒரு மாதத்திற்கு மொத்தம் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது, 84 நாட்கள் செல்லுபடியாகும் (சுமார் 3 மாதங்கள்). கூடுதல் டேட்டா திட்டத்தை வாங்க விருப்பமில்லாமல் கூடுதல் 2 ஜிபி தினசரி டேட்டாவை மட்டும் பெற விரும்பினால், 3 மாத திட்டத்தைப் பெறலாம். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஜியோ அல்லாதவர்களுக்கு 3,000 நிமிடங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வோடபோன்: சிறந்த 2 ஜிபி தினசரி டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்

வோடபோன் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 2 ஜிபி தினசரி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ஜியோ திட்டங்களைப் போல் இன்றி, நிறுவனம் வார இறுதி டேட்டா மாற்றம் அம்சத்தையும் வழங்குகிறது. அதாவது, வோடபோன் பயனர், வரவிருக்கும் வார இறுதி வரை பயன்படுத்தப்படாத தரவை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 1 ஆண்டு ZEE5 பிரீமியம் அணுகல், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். நிறுவனத்தின் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலையும் பெறுவீர்கள்.

வோடபோனுக்கு உண்மையில் 2 ஜிபி தினசரி டேட்டா திட்டம் இல்லை. ரூ.129 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மட்டுமே உள்ளது. இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது. இதில் 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த பேக் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஏர்டெல்: சிறந்த 2 ஜிபி தினசரி டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல்லில் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 56 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா ஆகியவை அடங்கும். மேலும், 400+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், அன்லிமிடெட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்குகிறது. விங்க் மியூசிக், அன்லிமிடெட் மாற்றங்கள் மற்றும் அன்லிமிடெட் இசை பதிவிறக்கங்களுடன் இலவச ஹலோடியூன்ஸ் அணுகலை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். ஃபாஸ்டேக்கில் ரூ 150 கேஷ்பேக்கையும் ஏர்டெல் வழங்குகிறது.

ரூ.349 திட்டத்துடன் இந்த சலுகைகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால், இதில் அமேசான் ப்ரைம் உறுப்பினரும் 28 நாட்களுக்கு அடங்கும். நீங்கள் இன்னும் அமேசான் ப்ரைமைப் பயன்படுத்தவில்லை என்றால், முதலில் இலவச பதிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். பின்னர் இந்த திட்டத்தை வாங்கலாம். இந்த வழியில் நீங்கள் 2 மாத இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.

2 ஜிபி டேட்டாவுடன் மலிவான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தை அணுகலாம். இது, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா, இலவச ஹலோடியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவற்றுக்கு இலவச அணுகல் மற்றும் பாரதி ஆக்சா ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Jio airtel vi 2g daily prepaid plans tamilnadu network tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X