Jio Airtel VI best prepaid plans Tamil News : நிறையப் பேர் வீட்டிலிருந்து பணிபுரிவதால், மென்மையான பணிக்கு நல்ல இணைய இணைப்பு தேவைப்படலாம். நிச்சயமாக, வைஃபை இணைப்பைக் கொண்டிருப்பது சிறந்தது. ஆனால், அனைவராலும் அதை வாங்க முடியாது. நிறையப் பயனர்கள் தங்கள் மொபைல் டேட்டாவை, வீட்டிலிருந்து வேலை செய்யப் பயன்படுத்துகிறார்கள். 4 நாட்களுக்கு தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 56 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொண்ட சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் இங்கே.
ரூ.449 வி ப்ரீபெய்ட் திட்டம்
தற்போது, ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் ஒப்பிடுகையில் வி (வோடபோன் ஐடியா) சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனமான இது, ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் கொண்டுள்ளது. இது அன்லிமிடெட் அழைப்பு சலுகைகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இரட்டை டேட்டா சலுகையுடன் வருகிறது. எனவே நீங்கள் அடிப்படையில் 4 ஜிபி தினசரி டேட்டாவை ரூ.449 ரீசார்ஜ் பேக் மூலம் பெறுவீர்கள். இது 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
ரூ.558 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் உண்மையிலேயே அன்லிமிடெட் அழைப்புகள், 3 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இதுவும் 56 நாட்கள் செல்லுபடியாகும். இதுதான் தற்போது 56 நாட்கள் செல்லுபடியாகும், ஏர்டெல்லின் மலிவான 3 ஜிபி திட்டம். வெறும் 28 நாட்களுக்கு ரூ.398 செலவழிப்பதை விட மொத்தம் 56 நாட்களுக்கு ரூ.558 செலுத்துவது நல்லது. இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளும் ஒன்றே. இப்போதைக்கு, ஏர்டெல் நிறுவனத்திற்கு 4 ஜிபி ரீசார்ஜ் திட்டம் இல்லை.
ரூ.444 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவிடம் நியாயமான 4 ஜிபி ப்ரீபெய்ட் டேட்டா திட்டம் இல்லை. ஆனால், உங்களுக்கு 3 ஜிபி டேட்டா திட்டங்களுக்கான விருப்பங்கள் உள்ளன. இருப்பினும், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும். 2 ஜிபி தினசரி டேட்டா, எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வரும் ரூ.444 ஜியோ ரீசார்ஜ் பேக் வாங்கலாம்.
நீங்கள் 2 ஜிபி டேட்டாவுக்கு மேல் பெற விரும்பினால் ரூ.349 திட்டத்தை வாங்கலாம். இது 3 ஜிபி தினசரி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டம் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். உங்களுக்கு அதிகமான டேட்டா தேவைப்பட்டால், நீங்கள் தனித்தனியாக டேட்டா பேக் வாங்கலாம்.
ரூ.11 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது, 1 ஜிபி டேட்டாவை அளிக்கிறது மற்றும் உங்கள் தற்போதைய திட்டம் காலாவதியாகும் வரை இது செல்லுபடியாகும். இதேபோல், ரூ 51 திட்டம் 6 ஜிபி டேட்டாவையும், ரூ 101 பேக்கில் 12 ஜிபி டேட்டாவும் அடங்கும். ஜியோவிலிருந்து வீட்டு வேலை திட்டங்களையும் நீங்கள் முயற்சி செய்யலாம். ரூ.151 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 ஜிபி டேட்டா, ரூ.201 திட்டம் 40 ஜிபி டேட்டா மற்றும் ரூ .51 திட்டத்தில் 50 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil