Jio Airtel VI best prepaid plans under Rs 250 Tamil News : ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி எஸ்எம்எஸ் நன்மைகள் மற்றும் 1 ஜிபிக்கு மேல் டேட்டா ஆகியவற்றைக் கொண்ட திட்டத்தைத் தேடுகிறவர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம். 250 ரூபாய்க்குள் ரீசார்ஜ் திட்டங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரூ.250-க்கு கீழ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ பல்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. தினசரி டேட்டா வரம்புடன் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இதில், நீங்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். டேட்டா தீர்ந்துவிட்டால், ஜியோ பயனர்கள் குறைந்த வேகத்தைப் பெறுவார்கள். எனவே, நீங்கள் அடிப்படையில் மொத்தம் 42 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. மேலும், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் பெறுவீர்கள்.
பூஜ்ஜிய தினசரி டேட்டா வரம்புடன் ப்ரீபெய்ட் திட்டத்தை விரும்புபவர்கள் ரூ.247 திட்டத்தை வாங்கலாம். இருப்பினும், இது 25 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. மேலும், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை இதில் அடங்கும்.
ரூ.250-க்கு கீழ் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. இது தினசரி அடிப்படையில் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் அனைத்து நன்மைகளும் ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தைப் போன்றதுதான். ஆனால், அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, இலவச ஹலோடியூன்ஸ், ஷா அகாடமிக்கு ஒரு வருட இலவசப் படிப்பு, ஃபாஸ்டேக்கின் ரூ.100 கேஷ்பேக் சலுகை, இலவச வின்க் மியூசிக் மற்றும் அப்போலோ 24*7 சர்க்கிள் ஆகியவற்றை இலவசமாக ஏர்டெல் வழங்குகிறது. நீங்கள் மலிவான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ஏர்டெல்லின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இதில், 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
ரூ.250 விலைக்குக் கீழ் வி ப்ரீபெய்ட் திட்டங்கள்
இதே போன்ற பலன்களுடன் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வி கொண்டுள்ளது. வோடபோன் ஐடியா பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. நீங்கள் இரவு 12:00 முதல் - காலை 6:00 வரை இலவச இரவு டேட்டாவையும் பெறுவீர்கள். இந்த திட்டம் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் வருகிறது. மேலும், இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
ரூ.219 வி ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இதில், 1 ஜிபி தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் உள்ளன. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. மீதமுள்ள நன்மைகள் ரூ.249 வி ரீசார்ஜ் திட்டத்தைப் போன்றது. இந்த திட்டத்தில் கூடுதலாக 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil