Airtel, Jio, Vi Recharge Plans Tamil News: கோவிட்-19 பேண்டமிக் காலகட்டம் நம் வாழ்க்கையை டிஜிட்டல் உலகில் முற்றிலுமாக அடைத்து வைத்திருக்கிறது. இதனால், அலுவலக மீட்டிங், ப்ரெசென்ட்டேஷன்கள், ஆன்லைன் வகுப்புகள், பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் என அனைத்தும் தடையற்ற 4 ஜி-ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் வந்துள்ளன. இருப்பினும், முழுமையாக இணையத்தைச் சார்ந்து இல்லாமல், தினசரி அடிப்படையில் நிறைய டேட்டாக்களை உட்கொள்ள விரும்பவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள். ரூ.200-க்கு கீழ், ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi (வோடஃபோன்-ஐடியா) வழங்கும் மலிவு ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.149 ரீசார்ஜ் திட்டம்
ஜியோ வழங்கும் ரூ.149 ரீசார்ஜ் திட்டம், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி தினசரி டேட்டா போஸ்டை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோவிலிருந்து ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் ஜியோவிலிருந்து 300 நிமிட ஜியோ அல்லாத FUP வரை 24 நாட்களுக்குச் செல்லுபடியாகும். கூடுதலாக, அனைத்து ஜியோ செயலிகளுக்கும் காம்ப்ளிமென்டரி சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது.
ஜியோ ரூ.199 ரீசார்ஜ் திட்டம்
இந்தத் திட்டம் மொத்தம் 42 ஜிபி டேட்டாவை, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவாகப் பிரித்து 28 நாட்களுக்கு வழங்குகிறது. இது தவிர, ஜியோவிலிருந்து ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு, ஜியோவிலிருந்து 1,000 நிமிட ஜியோ அல்லாத FUP மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என இவ்வனத்தையும் வழங்குகிறது. மேலும், அனைத்து ஜியோ செயலிகளுக்கும் காம்ப்ளிமென்டரி சந்தாவையும் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் திட்டம்
ரூ.199 விலையில் ஏர்டெல்லில் இருந்து கொடுக்கப்படும் இந்த ரீசார்ஜ் பேக்கில், 1 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் சலுகையை வழங்குகிறது. இது தவிர, ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றிற்கான இலவச சந்தாவின் கூடுதல் நன்மைகளையும் இது வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.179 ரீசார்ஜ் திட்டம்
இந்தத் திட்டம் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்ட 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 2 லட்ச பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸ், இலவச ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றின் சந்தா உள்ளிட்டவை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சில கூடுதல் நன்மைகள்.
ஏர்டெல் ரூ.149 ரீசார்ஜ் திட்டம்
இந்தத் திட்டம் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் தொகுக்கப்பட்டு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, இலவச ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றின் சந்தாவுடன் வருகிறது.
Vi (வோடஃபோன்-ஐடியா) ரூ.199 ரீசார்ஜ் திட்டம்
Vi-ன் ரூ.199 திட்டம், வாடிக்கையாளர்களுக்கு 24 நாட்களுக்கு 1 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியை வழங்குகிறது. மேலும் இது, Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கு காம்ப்ளிமென்டரி அணுகலையும் வழங்குகிறது.
Vi (வோடஃபோன்-ஐடியா) ரூ.149 ரீசார்ஜ் திட்டம்
இந்த ரூ.149 திட்டம், 3 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் இது, Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலையும் வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"