Jio Airtel VI best prepaid recharge plans under Rs250 after price hike Tamil News : நேற்று தான், ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை உயர்த்தியது. இது, டிசம்பர் 1 முதல் கிடைக்கும். ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) ஆகியவை சமீபத்தில் அதிகாரப்பூர்வ தளத்தில் ஏற்கனவே இருக்கும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களைத் திருத்தியுள்ளன. அதாவது நீங்கள் இனி ப்ரீபெய்ட் திட்டங்களைப் பழைய விலையில் வாங்க முடியாது. நீங்கள் ரூ.250-க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்து கொண்டிருந்தவராக இருந்தால், அதே விலை வரம்பில் உள்ள ஜியோ, வி மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் சமீபத்திய ஒப்பீட்டை இங்கே பாருங்கள்.
ரூ.250-க்கு கீழ் உள்ள ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் மற்றும் வி-யுடன் ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ மிகவும் மலிவு விலையில் சற்று சிறந்த பலன்களை வழங்குகிறது. ரூ.179 விலையில் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இதில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் 24 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
தினசரி 1.5ஜிபி டேட்டாவை விரும்புவோர், ரூ.239 ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கலாம். இது அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.
வைஃபையைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அதிக டேட்டா தேவைப்படாதவர்கள், ரூ.155 ஜியோ திட்டத்தை வாங்கலாம். இது 2ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு நன்மைகள் மற்றும் 50 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. நீங்கள் அதை வாங்கும் போது இந்தத் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரூ.250 விலையில் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல், ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது, 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளுடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒப்பீட்டளவில், ஜியோ 155 ரூபாய்க்கு இதே போன்ற திட்டத்தை வழங்குகிறது.
ரூ.239 ஏர்டெல் திட்டத்தில், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் ஆகியவை அடங்கும். இந்த இரண்டு திட்டங்களும் அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் சந்தாவிற்கு இலவச அணுகலைக் கொண்டு வருகின்றன. மேலும், இலவச ஹலோடியூன்கள் மற்றும் விங்க் மியூசிக் கிடைக்கும்.
250 ரூபாய்க்குள் Vi ரீசார்ஜ் திட்டங்கள்
Vi-ல் ரூ.250க்கு கீழ் ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே உள்ளது. அது, ரூ.179 ரீசார்ஜ் பேக் ஆகும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு மொத்தம் 2ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி 1ஜிபி டேட்டாவை விரும்புவோர் புதிய ரூ.269 Vi ரீசார்ஜ் திட்டத்தை வாங்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil